ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஆன் 7 : எதிர்பார்க்கப்படும் 7 அம்சங்கள்!

By Meganathan
|

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஆன்7 2016 கருவியை உருவாக்கி வருவதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இதனை உறுதி செய்யும் வகையில் இது குறித்த பல்வேறு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதன் படி SM-G6100 என்ற குறியீட்டு பெயரில் புதிய சாம்சங் கருவி குறித்த தகவல்கள் GFX பென்ச் மார்க்கிங் தளத்தில் கசிந்திருக்கின்றது.

கேலக்ஸி ஆன்7 (2016)

கேலக்ஸி ஆன்7 (2016)

இம்முறை M-G610F என்ற குறியீட்டு பெயரில் புதிய சாம்சங் கருவியின் அம்சங்கள் GFX பென்ச் மார்க்கிங் தளத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இந்தக் கருவி நிச்சயம் கேலக்ஸி ஆன் (2016) என்றே கூறப்படுகின்றது.

கீக்பென்ச்

கீக்பென்ச்

கீக்பென்ச் தகவல்களின் படி புதிய கேலக்ஸி ஆன்7 கருவியானது எக்சைனோஸ் 7870 ஆக்டா-கோர் பிராசஸர், 1.59 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் என இரு வித பிராசஸர்கள் கொண்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் SM-G6100 கருவி 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இந்தக் கருவி சீனாவில் வெளியிடப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

மெமரி

மெமரி

புதிய சாம்சங் கருவியானது 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படலாம் எனக் கூறப்படுவதோடு மெமரி நீட்டிக்கும் வசதி குறித்து எவ்வித தகவலும் இல்லை.

மார்ஷ்மல்லோ

மார்ஷ்மல்லோ

புதிய கருவியில் ஆண்ட்ராய்டு 6.0..1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கலாம். இதோடு புதிய வகை டர்போ ஸ்பீடு தொழில்நுட்பம் பயன்படுத்தி 40 சதவீதம் வேகமாக இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

சாம்சங் வரலாற்றில் பட்ஜெட் விலை கருவியில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட இருக்கும் முதல் கருவியும் இது இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

திரை

திரை

முன்பு வெளியான தகவல்களில் 4.8 இன்ச் ஃபுல் எச்டி திரை 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட திரை வழங்கப்படலாம். இந்தக் கருவி சிறிய திரை கொண்ட கருவிகளை விரும்புவோரைக் கவரும் வகையில் இருக்கும்.

கேமரா

கேமரா

கேமரா ஆப்ஷன்களை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்படலாம்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஆன்7 கருவியில் ப்ளூடூத், ஜிபிஎஸ், வை-பை, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 4ஜி நெட்வர்க் வசதி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்காம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

விலை

வெளியான தகவல்களில் கேலக்ஸி ஆன் 7 கருவியின் விலை குறித்து எவ்வித தகவலும் இடம் பெறவில்லை.

Best Mobiles in India

English summary
Metal bodied Samsung Galaxy On7 (2016) spotted online 7 Expected Specs Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X