உங்கள் ஆபீஸ் சோம்பேறிகளை 'கழுவி கழுவி ஊற்ற' உதவும் - மெமோ ஆப்..!

Posted by:

அலுவகத்தில் நல்ல பாஸ், அருமையான மேனேஜர், அழகான டீம் லீடர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..! ஆனால் உண்மை என்னவென்றால், அது எதுவும் அமையவே அமையாது..!

ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை எளிமையாக சரி செய்வது எப்படி..??

அப்படியாக, நம்மை எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் ஆபீஸ் ஊழியர்களின் முகத்தை பார்த்து "நீ பாக்குற வேலைய விட, நான் நல்லா தான் பாக்குறேன்..!" என்றும், "மூடிட்டு உன் வேலைய பாரு..!" என்று சொல்ல வாய் வந்து விடும். ஆனால் வார்த்தைகளை அடக்கி கொள்வோம். இனி அடக்க வேணாம் மக்களே, உங்களுக்கு உதவ காத்திருக்கிறது - மெமோ ஆப்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆபீஸ் :

நாம் என்ன தான் 'மாங்கு மாங்கு' என்று கம்பெனிகாக உழைத்தாலும் நம்மை பாராட்ட ஒருவரும் வர மாட்டார்கள்..!

பிழை :

அதுவே ஒரு சின்ன பிழை செய்து விட்டால் கூட "இதலாம் எவன்டா வேலைக்கு சேர்த்தது..?" என்ற அளவிற்கு நம்மை பார்ப்பார்கள்..!

ஆபீஸ் தொல்லை:

இது போன்ற ஆபீஸ் தொல்லைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி உருவாக்கப்பட்டதே - மெமோ ஆப்..!

சொந்த கருத்து :

மெமோ ஆப் மூலம் உங்கள் ஆபீஸ் ஊழியர்கள் சார்ந்த 'உங்கள் சொந்த' கருத்தை பகிர்ந்து கொள்ளு முடியும்.

பெயர் :

இதில் என்ன சுவாரசியம் என்றால் கருத்துகளை பெயர் குறிப்பிட படாமல் பகிர்ந்து கொள்ள வழி வகுக்கிறது - மெமோ ஆப்..!

குரூப் ஷாரிங் :

மெமோ ஆப் மூலம் ஒரு 'குரூப் ஷாரிங்'கை உருவாக்க முடியும்.!

நிர்வாகம் :

அதாவது இதன் மூலம் ஆபீஸ் நிர்வாகம் பற்றியும், ஆபீஸ் ஊழியர்கள் பற்றியும் பல கருத்துகளை பதிவு செய்ய முடியும்.

ஊழியர்கள் :

அதே சமயம் ஆபீஸ் நிர்வாகம் எப்படி நடக்கிறது, ஆபீஸ் நிர்வாகம் பற்றி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் ஆபீஸ் நிர்வாகிகள் தெரிந்து கொள்ள வழி வகுகிறது இந்த மெமோ ஆப்..!

பாராட்டவும் தான் :

இந்த ஆப் ஆனது குறை கூறுவதற்கு மட்டுமில்லை பாராட்டுவதற்க்கும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீர்வு :

மெமோ ஆப், காலம் காலமாக நீடிக்கும் ஆபீஸ் சார்ந்த உள்அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க வல்லது என்றும் நம்பப்படுகிறது..!

இணைந்து கொள்ள :

மெமோ ஆப் உடன் பல பெருநிறுவனங்கள் இணைப்பில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும், டவுன் லோட் செய்து இணைந்து கொள்ள.. இங்கே கிளிக் செய்யவும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
The app called Memo, allows workers to anonymously post messages about their employers. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்