மேய்சு ப்ரோ 6எஸ் : புத்தம் புதிய ஸ்மார்ட்போன் பற்றி கசிந்த தகவல்கள்.!

கடந்த இரண்டு மாதங்களாக மெய்சு நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மெய்சு ப்ரோ 6எஸ் என்ற பெயர் கொண்ட இக்கருவியின் அம்சங்கள் சில ஆன்லைனில் கசிந்துள்ளன.

Written By:

மெய்சு நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளது மற்றும் அது மெய்சு ப்ரோ 6 கருவியின் மேம்படுத்தல் என்றும் நம்பப்படுகிறது. எனினும் முன்பு வந்த சில வதந்திகளின்படி டவுல் எட்ஜ் ஸ்க்ரீன் கொண்ட மெய்சு ப்ரோ 7 கருவி தான் முதலில் வெளியிடப்படும் என்ற தகவல்கள் கிடைத்தன ஆனால் தற்போது நிறுவனம் அடுத்த ஆண்டு தான் அந்த சாதனத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.

நேற்று இந்த புதிய கருவி சார்ந்த சில புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாக ஸ்மார்ட்போன் சார்ந்த விவரக்குறிப்புகள் பற்றிய தெளிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஒப்பீட்டளவில் ஒரு புதிய மீடியாடெக் எம்டி6796 எஸ்ஓசி

கசிவு புகைப்படங்களை வைத்து பார்க்கையில் இக்கருவியானது புதிய மீடியா டெக் எஸ்ஓசி உடன் புதிய மடல் எண் எம்டி6796 கொண்டுள்ளது. சிப்செட் மாடல் நம்பரை வைத்து பார்க்கும் இந்து மீடியாடெக் ஹீலியோ எக்ஸ்20 அல்லது எக்ஸ்25 ஆகிய இரண்டுடனும் பொருந்தவில்லை. ஆக இது புதிய ஆக்டா-கோர் சிப் செட் ஆக இருக்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

மேலும் கசிவு புகைப்படங்கள் இக்கருவியானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது அதில் 53.57ஜிபி மட்டுமே பயனர்களால் உபயோகித்துக்கொள்ள முடியும்

புல் எச்டி டிஸ்ப்ளே

மேலும் வெளியான படங்களை வைத்து பார்க்கும்போது முந்தைய யூகங்களின்படி ஸ்மார்ட்போன் ஒரு 1080பி ஸ்க்ரீன் கொண்டு வரக்கூடும் மற்றும் ஒரே ஒரு வேரியண்ட்டில் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ளைமி ஓஎஸ் 6.0

முந்தைய கசிவை உறுதி செய்யும் பொருட்டு மெய்சு அதன் உள்நாட்டில் ப்ளைமி இயக்கமுறைமை 6.0-யை இக்கருவியின் மூலமாக சோதனை செய்கிறது. மெய்சு ப்ரோ 6எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

எக்சிநோஸ் 8890 சிப் கொண்ட மற்றொரு வேரியண்ட்

முந்தைய கசிவுகளின்படி மெய்சு ப்ரோ 6எஸ் கருவியானது எக்சிநோஸ் 8890 சிப்செட் கொண்ட மேமேலுமொரு வேரியண்ட்டில் கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இப்போது வரை இந்த மாறுபாடு குறித்து எந்த செய்தியும் கிடையாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

தனித்து நிற்கும் தலைசிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்!?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Meizu Pro 6s to Come With a MediaTek Octa-Core SoC and 4GB of RAM: Everything You Need to Know. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்