மெய்ஸூ எம்எக்ஸ்5 ஃபர்ஸ்ட் லுக்..!

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான மெய்ஸூ இந்தியாவில் புதிய கருவிகளை நேற்று (ஆகஸ்டு 26) வெளியிட்டது. அதன்படி இந்நிறுவனம் மெய்ஸூ எம்1 நோட், எம்2 நோட் மற்றும் எம்எக்ஸ்5 எனும் கருவிகளை வெளியிட்டது.

ஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..??

அந்த வகையில் மெய்ஸூ எம்எக்ஸ் 5 பர்ஸ்ட் லுக் மற்றும் சிறப்பம்சங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வடிவமைப்பு

7.6 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி முழுவதும் மெட்டல் பாடி வடிவமைப்பு கொண்டிருப்பதோடு மேட் க்ரே மூலம் அழகூட்டப்பட்டுள்ளது.

அளவு

5.5 இன்ச் அளவு இருக்கும் இந்த கருவியில் கைரேகை ஸ்கேனர், ஹோம் பட்டனாக செயல்படுகின்றது. இடது புறத்தில் நானோ சிம் ட்ரே வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

மெய்ஸூ எம்எக்ஸ்5 கருவியானது 5.5 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

சிப்செட்

மீடியாடெக் ஹெலியோ எக்ஸ்10 சிப்செட் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

எம்எக்ஸ் 5 கருவியில் மெமரியை பொருத்த வரை 16, 32 மற்றும் 64 ஜிபி வழங்கப்பட்டுள்ளது. மெமரியை நீட்டிக்கும் வசதி எந்த கருவியிலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயங்குதளம்

மெய்ஸூ நிறுவனம் புதிய கருவிக்கு தனது சொந்த ஃப்ளைம் யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 வழங்கி இருக்கின்றது.

கனெக்டிவிட்டி

3ஜி, 4ஜி சப்போர்ட் செய்யும் டூயல் நானோ சிம் கார்டு ஸ்லாட், வை-பை 802.11ac, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், ஓ-ஜிபிஎஸ், கைரோ, அக்செல்லோமீட்டர், மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

மெய்ஸூ எம்எக்ஸ்5 கருவியில் 20.7 எம்பி ப்ரைமரி கேரமா, மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ப்ரைமரி கேமரா மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் வசதி மற்றும் ஃபுல் எச்டி வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.

பேட்டரி

கழற்ற முடியாத 3150 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவி 0 முதல் 25 சதவீத சார்ஜ் ஆக 10 நிமிடங்கள் தான் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Meizu MX5 First Impressions. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்