ஹானர் பீ ஸ்மார்ட்போன் : உங்களை கவர்ந்திழுக்கும் சிறப்பம்சங்கள்

By Meganathan
|

ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் தான் ஹானர் பீ. இந்திய வாடிக்கையாளர்களை கவரும் பல சிறப்பம்சங்களை கொண்டு சரியாக பட்ஜெட் விலையில் கிடைப்பது இதன் வெற்றியை உறுதி செய்திருக்கின்றது.

அந்த வகையில் ஹானர் பீ ஸ்மார்ட்போனில் உங்களை கவர்ந்திழுக்கும் முக்கிய சிறப்பம்சங்களை பாருங்கள்

வடிவமைப்பு

வடிவமைப்பு

சிறந்த வடிவமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதோடு ஹானர் பீ கைகளில் கச்சிதமாக பொருந்தும் படி அதன் வடிவமும் அமைந்திருக்கின்றது.

டைமென்ஷன்

டைமென்ஷன்

ஹானர் பீ 129*66.3*10 எம்எம் டைமென்ஷன் மற்றும் 170 கிராம் எடை கொண்டிருக்கின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

4.5 இன்ச் ஸ்கிரீன் 480*854 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 218 பிக்ஸல் டென்சிட்டி வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

SC7731 குவாட்கோர் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக் ஸ்பீடு மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதால் மல்டி டாஸ்கிங் செய்வதில் தொந்தரவு ஏதும் இருக்காது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

மெமரியை பொருத்த வரை கவலை படும் வகையில் இல்லாமல் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 8 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 802.11bg வை-பை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ்ஏஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி

பேட்டரி

வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு 1730 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டுள்ளது. மேலும் பவர் சேவிங் மோடு ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

நிறம்

நிறம்

பயனாளிகளின் உபயோகத்தை கருத்தில் கொண்டு ஹானர் பீ கவர்ச்சிகரமான இரு நிறங்களில் கிடைக்கின்றது.

விலை

விலை

பல சிறப்பம்சங்களை வழங்கி இருந்தாலும் இதன் விலை ரூ.4,499க்கு இந்திய சந்தையில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the features you'd love on the new Honor Bee. this is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X