இரண்டு மாதம் விடுப்பு எடுக்கும் ஃபேஸ்புக்.!!

Written By:

உலகின் பிரபல சமூக வலைதளத்தின் நிறுவனரான மார்க் சூக்கர்பர்க் அப்பாவாகிவிட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. மேலும் மார்க் மற்றும் ப்ரிஸ்கில்லியா சென் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மார்க் எடுத்திருக்கும் புதிய முடிவு தொழில்நுட்ப துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பிரபலம்

ஃபேஸ்புக் சமூக வலைதளம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதோடு உலகளவில் பிரபலமாகியும் வருகின்றது.

விடுப்பு

இந்நிலையில் ஃபேஸ்புக் நிருவனர் மார்க் இரு மாதங்களுக்கு அனைத்து வியாபாரங்களுக்கும் முழுக்கு போட்டு விடுப்பு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

குழந்தை

ப்ரிஸ்கில்லியாவிற்கு குழந்தை பிறந்தவுடன் விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ள மார்க் இரு மாதங்களுக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் விடுமுறையை கழிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

போஸ்ட்

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது குழந்தை மற்றும் குடும்பம் என அனைவருக்கும் நன்மையை விளைவிக்கும் என்றும் மார்க் தனது போஸ்ட் மூலம் குறிப்பிட்டிருக்கின்றார்.

விடுப்பு

அமெரிக்காவில் ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தால் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷெரில் சான்ட்பெர்க்

மார்க் விடுமுறைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு குழந்தையை பார்க்க ஆவலோடு இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குனர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.

தலைமை

மார்க் விடுமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் நிறுவனத்தை நிர்வகிப்பது யார் என்பது குறித்த தகவல் தற்சமயம் வரை அறிவிக்கப்படவில்லை.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Mark Zuckerberg to take two months of paternity leave. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்