இந்தியாவிற்கு கிடைத்தது மற்றுமொரு பெருமை..!

Posted by:

மாட்டு வண்டியிலும், சைக்கிள் கேரியர்களிலும் ராக்கெட் பாகங்களை ஏற்றி கொண்டு சென்று ஏவுகணை விட்ட நாடு தானே என்று ஒரு காலத்தில் இந்தியாவை ஏனைய நாடுகள் கேலி செய்தனர். இப்போது இந்தியாவை கிண்டல் செய்த அதே நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவை பின் பற்று கறது, இந்தியாவின் உதவியை நாடுகிறது என்பது தான் நிதர்சனம்..!

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

சமீபத்தில் அமெரிக்காவின் நாசா, இஸ்ரோவின் உதவியை நாடியதே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தற்போது இந்தியா, விண்வெளி ஆராய்ச்சி துறையில் மேலும் ஒரு மைல் கல்லை ஏட்டியுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மைல் கல் :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் புதிய மைல் கல்லுக்கு காரணம் இஸ்ரோவின் மணி மகுடமான - மங்கள்யான் தான்..!

சரித்திர வெற்றி :

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு சென்றடைந்த இந்தியாவின் மங்கள்யான் குறிப்பிடத்தக்க ஒரு சரித்திர வெற்றியாகும்..!

3டி புகைப்படங்கள் :

கடந்த 2013-ஆம் ஆண்டு வெற்றிகரமாய் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் செவ்வாய் கிராகத்தின் முப்பரிமான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி உள்ளது..!

பள்ளத்தாக்கு :

மங்கள்யான் அனுப்பு வைத்துள்ள புகைப்படத்தில் இருப்பது சூரிய மண்டலத்திலேயே மிக பெரிய பள்ளத்தாக்கான - வால்லெஸ் மரிநெரீஸ் (Valles Marineris) பள்ளத்தாக்காகும்..!

பகுதி :

வால்லெஸ் மரிநெரீஸ் பள்ளத்தாக்கில் ஓபிர் சாஸ்மா (Ophir Chasma) ஒரு மிகப்பெரிய பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

எம் சி சி :

இந்த புகைப்படங்களை எடுத்தது மங்கள்யானின் மார்ஸ் கலர் கேமிரா (MCC - Mars Colour Camera ) ஆகும்..!

தேதி :

இந்த புகைப்படங்கள் கடந்த மாதம் ஜூலை 19-ஆம் தேதி எடுக்கப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது..!

உயர் நிலை :

மேலும் இந்த 3டி புகைப்படங்கள் 1857 கிலோ மீட்டர் உயர் நிலையில் (Altitude) எடுக்கப்பட்டவைகள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது..!

விளக்கம் :

வால்லெஸ் மரிநெரீ பள்ளத்தாக்கு பல அடுக்குகளையும், பல வகையான தரைப்பகுதிகளையும் கொண்டுள்ளத்தை இந்த புகைுப்படங்கள் விளக்குகின்றன..!

இதர புகைப்படங்கள் :

மங்கள்யான் அனுப்பிய 3டி புகைப்படங்களோடு மங்கள்யான் அனுப்பிய இதர புகைப்படங்களையும் இங்கு தொகுத்துள்ளோம்..!

சுற்றுப்பாதை :

கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் இணைந்தது..!

மொத்தம் :

இந்தியாவின் மங்கள்யானை சேர்த்து மொத்தம் 5 விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது..!

நாசா :

அவைகளில் நாசாவின், மாவேன் (MAVEN) மற்றும் மார்ஸ் ஓடிஸ்ஸி (Mars Odyssey) ஆகியவைகள் குறிப்பிடத்தக்கது..!

அமைப்பு :

செவ்வாய்யை ஆய்வு செய்யும் விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்ளாமல் இருக்க கொல்லிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம் (collision-avoidance system) அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Check out here about ISRO's Mangalyaan Sends Back Stunning 3D Images of Mars. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்