ஃபேஸ்புக் மெசேஜ் அனுப்பி சிறை சென்ற வாலிபர்.!!

Written By:

ஃபேஸ்புக் சேவையை அதிகம் பயன்படுத்தினால் சிறை செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த வாலிபர்..!

ஃபேஸ்புக் தளம் மூலம் உலகம் முழுக்க வியாபார ரீதியிலான விளம்பரம் செய்ய முடியும். இதனை தவறாக பயன்படுத்தி பலருக்கும் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் இன்று சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கின்றார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

ஃபேஸ்புக்கில் அதிகளவு மெசேஜ் அனுப்பிய குற்றத்திற்காக லாஸ் வேகாஸ் வாலிபருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

02

ஃபேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்த கோரியும், இந்த வாலிபர் சுமார் 2.7 கோடி ஸ்பேம் அதாவது தேவையற்ற மெசேஜ்களை அனுப்பியதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

03

இதோடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் பகுதியை சேர்ந்த நீதிபதி குற்றவாளியான சான்ஃபோர்டு வல்லேஸ் என்பவருக்கு சுமார் ரூ. 2,08,07,184.50 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

04

முன்னதாக இவர் மூன்று மாதங்களில் சுமார் 5,00,000 ஃபேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி நண்பர்களின் போஸ்ட் போன்று கோரப்படாத விளம்பரங்களை பதிவு செய்ததாக ஒப்புகொண்டுள்ளார்.

05

வல்லேஸ் வாடிக்கையாளர்களை மின்னஞ்சல் மூலம் ஏமாற்றி அவர்களின் தகவல்களை பெற்றதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

06

வாடிக்கையாளர்களை ஏமாற்றி தான் பெற்ற கணக்குகளின் கடவுச்சொல் பயன்படுத்தி அவர்களின் கணக்குகளை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07

தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்பவதில் தான் ஒரு ராஜா என குறிப்பிட்டு கொள்ளும் சான்ஃபோர்டு 1997 முதல் இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Man who sent spam messages on Facebook gets 2 years in prison Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்