எந்த நெட்வொர்க் உடனாகவும் அன்லிமிடெட் கால்ஸ், இலவச 1ஜிபி தரவு.!

ரிலையன்ஸ் ஜியோ உட்பட பிற போட்டியாளர்களை சமாளிக்கும் வண்ணம் ஏர்டெல் இப்போது அதன் விஸ்வரூப சலுகை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.

Written By:

புதிதாக சந்தைக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வரம்பற்ற மற்றும் இலவச சேவைகள் மூலம் பிற தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களை தூண்டி விட்டு கொண்டிருக்கிறார் என்பதை ஒற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதை எதிர்கொள்ளும் நோக்கத்தில் பல தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் ஏற்கனவே கொண்டிருந்த தங்களின் கட்டண திட்டங்களை மறுவடிவமைப்பதிலும் அல்லது புதிய பேச்சு நேரம் மற்றும் தரவு பொதிகளை அறிமுகம் செய்வதிலும் மும்முரமாய் செயல்பட்டு வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ அதன் வரம்பற்ற வெல்கம் ஆஃபரை அறிமுகம் செய்த உடனேயே பிற தொலைத் தொடர்பு போட்டியாளர்கள், குறிப்பாக பார்தி ஏர்டெல் பல கவர்ச்சிகரமான டால்க்டைம் மற்றும் தரவு திட்டங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அறிமுகம்

இப்போது பார்தி ஏர்டெல் ஆனது ரிலையன்ஸ் ஜியோ சேவையை போன்ற எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற அழைப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் இப்போதே இந்த வாய்ப்பை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை பற்றிய தொகுப்பே இது.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அன்லிமிடெட் அழைப்புகள்

ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற மற்றும் இலவச சலுகைகளை எதிர்த்து, ஏர்டெல் இறுதியாக அதன் வரம்பற்ற அழைப்புகளை எந்த நெட்வொர்க் உடனான வெளியூர் மற்றும் உள்ளூர் அழைப்புகளை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை போல 30 நிமிடங்கள் எல்லை போன்ற எந்த நேர வரம்புகளும் ஏர்டெல் வழங்கும் சலுகையில் கிடையாது.

இலவச 3ஜி/ 4ஜி

ஏர்டெல் பயனர் இந்த புதிய ரூ.299/- பேக் மூலம் எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற அழைப்புகளை 28 நாள்கள் வரை அனுபவிக்க முடியும் உடன் பார்தி ஏர்டெல் வழங்கும் 1ஜிபி அளவிலான இலவச 3ஜி/ 4ஜி தரவையும் 28 நாட்கள் அனுபவிக்க முடியும்.

ஆபரை பெறுவது எப்படி.?

#1 முதலில் *121*1# எண்ரச எண்ணிற்கு டயல் செய்யவும்.
#2 மைஏர்டெல் ஆப் மூலமாக குறிப்பிட்ட சலுகையை தேர்வு செய்து ரீசார்ஜ் நிகழ்த்திக்கொள்ளவும்.
#3 அருகிலுள்ள சில்லறை கடைக்கு சென்று ரூ.299/- ரீசார்ஜ் உங்கள் எண்ணிற்கு செல்லுபடியாகுமா என்பதை கேட்டறிந்த பின்னர் ரீசார்ஜ் நிகழ்த்தவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சலுகை வரம்புகள்

#1 இச்சலுகை ப்ரீபெயிட் பயனர்களுக்கு மட்டும்.
#2 இப்போதைக்கு கொல்கத்தா வட்டத்தில் உள்ள பயனர்களுக்கு மட்டும்.
#3 2ஜி பயனர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகாது.

மேலும் படிக்க

டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இலவச டால்க் டைம், மற்றும் பல.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Airtel Dhamaka: Make Unlimited Calls to Any Network and Get Free 1GB 3G/4G Data. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்