இந்திய தயாரிப்பு தலைசிறந்த தயாரிப்பு.!!

இன்று சக மனிதர்களோடு பேசுவதோடு செயலிகளுடன் தான் அதிகம் பேசுகின்றோம். எவ்வித தகவல்களை வழங்குவதில் துவங்கி, ஓய்வு நேரங்களில் துணையாக இருப்பது வரை அனைத்திற்கும் செயலிகள் தான் பயன்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு ஆப் உலகில் எண்ணற்ற செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் முழு வீச்சில் சேவை புரிந்து வருகின்றது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தலைசிறந்த செயலிகளை பற்றி இங்கு பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இ-வணிகம்

2007ஆம் ஆண்டு ப்ளிப்கார்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியாவின் அமேசானாக கருதப்பட்டது. இ வணிகத்தில் இந்தியாவில் 60 சதவிகிதம் இடத்தை பெற்றுள்ளது. மற்ற வணிகர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றது.

மொபைல் ரீசார்ஜ் மற்றும் மொபைல் வாலெட்

பேடிஎம் மொபைல் ரீசார்ஜாக ஆரம்பித்து பின்பு பில் பேமெண்ட் இணையதளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது ஒரு மிக பெரிய இடத்தை பெற்று உள்ளது. இதற்கு எண்ணற்ற துணை தளங்கள் உள்ளன. இதன் மொபைல் வாலட்கள் பல சேவைகளுக்கு கட்டணம் கட்ட உதவுகின்றது.

குறுந்தகவல் ஆப்

ஏர்டெல் நிறுவனத்தின் பின்னால் உள்ள பாரதியில் இருந்து தோன்றியது இந்த மெசேன்ஜர் ஆப். வாட்ஸ்ஆப் செயலிக்கு பிறகு கோடிக்கணக்கில் டவுன்லோட் மற்றும் தகவல் தொடர்பிற்கு துணைபுரிகின்றது.

ரெஸ்ட்டாரண்ட் ரேட்டிங்ஸ் மற்றும் கருத்து கணிப்புகள்

இது உணவு விரும்பிகளுக்கு பிடித்த செயலி. இதன் மூலம் விடுதிகளில் மெனு மற்றும் உணவு பட்டியல் மற்றும் அதன் விலை நிலவரங்களை அறிய முடியும். ஆனால் சில தளங்களில் மட்டும் தான் உணவை முன்பதிவு செய்ய முடியும்.

செய்தி மற்றும் இபுத்தகம்

இது தினசரி பார்க்கப்படும் தளம். டெய்லி ஹன்ட் செயலியின் மூலம் செய்தி, பத்திரிக்கை மற்றும் இபுத்தகம் போன்றவை கிடைக்கும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில் இதில் ரீஜினல் பகுதி மற்றும் இந்திய பத்திரிக்கைகள் மற்றும் செய்திதாள் கிடைக்கும்.

இசை ஸ்ட்ரீமிங்

இந்த தளம் இந்தியாவின் Times internet மூலம் வந்தது. Gaana.com மூலமாக பல வித இசை தொகுப்பை பெற முடியும். இது இசை விரும்பிகளுக்கு ஒரு வர பிரசாதம்.

இசை மற்றும் திரப்படங்கள்

Hungama.com இல் எண்ணற்ற கலக்‌ஷன்களில் இசை, வீடியோ மற்றும் திரப்படங்களின் தொகுப்பு உள்ளது. இதில் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் அதிக அளவில் உள்ளன.

ஓலா போக்குவரத்து

இதை Bhavish Aggarwal என்பவர் தோற்றுவித்தார். ஓலா இந்தியாவின் வெற்றிகரமான போக்குவரத்து செயலியாக இயங்கி வருகின்றது. இது மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிறந்த போட்டியாளராக இயங்கி வருகின்றது.

வாழ்க்கை முறை

ஹப்டிக் ( Haptik ) உங்கள் தனிப்பட்ட சேவகனாக இருந்து மக்களிடம் சேட் செய்து செயல்களை நடத்தி கொள்ள உதவியாக இருக்கும். சேட் மூலம் பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளவும், வாங்கவும் உதவியாக இருக்கும்.

மொபைல் ரீசார்ஜ்

மொபிவிக் ( Mobikwik ) மூலமாக ரீசார்ஜை சிறந்த முறையில் செய்ய முடியும். இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் மொபைல் வாலெட்டில் முன்னனி வகிக்கின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Made in India apps for daily lifestyle for Indians Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்