அங்க சுத்தி, இங்க சுத்தி இப்போ ஜியோவும் வெடிக்குது..

சாம்சங், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவன கருவியும் வெடித்துச் சிதறியிருக்கின்றது.

Written By:

தீபாவளியை முன்னிட்டு எல்லா ஸ்மார்ட்போனும் வெடிக்கிறதோ, ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட்போன் அல்லது மின்சாதன கருவி வெடிக்கும் போதும் இப்படித் தான் யோசிக்கத் தோணுகிறது.

சாம்சங், ஆப்பிள் வரிசையில் புதிய நிறுவனம் ஒன்றும் இணைந்திருக்கின்றது. மிகக் குறைந்த காலகட்டத்திலேயே இந்தியா முழுக்கப் பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் லைஃப் ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியிருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ட்விட்டர்

தான் பயன்படுத்தி வந்த லைஃ போன் வெடித்த சம்பவத்தை அப்படியே ட்விட்டரில் பதிவு செய்திருக்கின்றார் தன்விர் சாதிக். இது குறித்த விசாரணையில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம்

வெடித்த தனது லைஃப் கருவியின் புகைப்படங்களுடன், இதே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோர் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு சாதிக் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பதில்

லைஃப் கருவி வெடித்த சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் லைஃப் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் விரைவில் கருவி வெடித்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து, முறையான நடவடிக்கையினை எடுப்போம் என ரிலையன்ஸ் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு

லைஃப் ஸ்மார்ட்போன் கருவிகள் அனைத்தும் உலகத் தரத்துடன் மிகவும் கவனமாகத் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கருவியும் முறையான தரக்கட்டுப்பாடு வழிமுறைகளுடன் தயாரிக்கப்படுகின்றது என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விற்பனை

இந்தியாவில் விற்பனையாகும் 4ஜி கருவிகளில் 8 சதவீத பங்குகளுடன் முதல் மூன்று இடங்களில் ஜியோ இருக்கின்றது. இந்தப் பட்டியல் 2016 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரையிலானது ஆகும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Lyf Smartphone Allegedly Explodes
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்