துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

நம்மில் பலருக்கு துணி துவைப்பதென்பது உலக மகாயுத்தம் நடத்துவதற்க்கு சமம். குவியல் குவியலாய் கிடக்கும் அழுக்கு துணிகளை துவைக்கும் ஒவ்வொருவரும், இனிமே சேர்த்து வைக்காம தினம் கொஞ்சம் கொஞ்சமா எல்லா துணியையும் துவைச்சிடனும் என்று வாராவாரம் சபதம் போடுவதும், அதை நிறைவேற்ற முடியாமல் போவதும் வழக்கமாகிவிட்ட ஒன்று.

கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாம் வாங்க..!

 துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

வாஷிங் மெஷின் வாங்கி கரண்ட் பில் கட்ட முடியாத, சரியான ஒய்வு கிடைக்கப் பெறாத, மூட்டை துணிகளோடு சண்டை போட முடியாத இரும்பு பெண்மணிகளுக்கும், அகதிகளாய் திரியும் பேச்சிலர்ஸ்களுக்கும் ஒரு விடிவு காலமே இல்லையா என்ற கூட்டு புலம்பல் கனடா நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கேட்டு விட்டதுபோலும் - டுரூமி உருவாக்கப் பெற்றது.

 துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

டுரூமி - 55 சென்டிமீட்டர் உயரமும், 6.80 கிலோ எடையும் கொண்ட ஒரு சிறிய துணி துவைக்கும் கருவி. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதை இயக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும் கூடவே 10 லிட்டர் தண்ணீரும் கொஞ்சம் துணி துவைக்கும் பவுடரும் இருந்தால் போதும், 2 கிலோ அளவிலான
துணிகளை, அதாவது ஆறு முதல் ஏழு துணிகள் வரை துவைக்கலாம்.

உடல்நலத்தை கெடுக்கும் தொழில்நுட்ப கேஜெட்கள்

 துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

இதை பயன்படுத்த, முதலில் டுரூமியின் பிளாஸ்டிக் மூடியை கழற்றி துணிகளை போட்டு, பின் 5 லிட்டர் தண்ணீரையும் கொஞ்சம் துணி துவைக்கும் பவுடரையும் சேர்த்து அடைக்க வேண்டும். பின் டுரூமியின் அடிப்பகுதியில் இருக்கும் பெடலை இரண்டு நிமிடம் தொடர்ந்து மிதிக்க டுரூமிக்குள் இருக்கும் ட்ரே சுழன்று துணிகளை துவைக்கும்.

 துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

பின் மறுபடியும் 5 லிட்டர் தண்ணீரை கலந்து இரண்டு நிமிடம் பெடல் செய்ய துணிகள் அலசப்படும். பின் டுரூமியில் இருக்கும் தண்ணீர் வெளியேற்றும் பட்டனை அழுத்த தண்ணீர் தானாய் வெளியேறும். அவ்வளவுதான் துணிகளை எடுத்து காயப்போட வேண்டியதுதான்.

 துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

டுரூமி, வாஷிங் மெஷினுக்கு மாற்று என்ற அளவிற்க்கு இல்லாவிட்டாலும் தண்ணீர் மற்றும் கரண்ட்டை மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், குழந்தைகளை கையாளும் பெற்றோர்கள், தனித்து வாழ்பவர்கள் போன்றவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த டுரூமியானது நம்ம ஊர் தையல் மெஷின் மிதிக்கும் கால்களுக்கு இன்னும் சுலபம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Drumi is a compact foot-pedal-powered washing machine
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்