இப்போது விற்பனையில் டாப் 10 ஸ்மார்ட்வாட்ச்கள்..!

By Meganathan
|

எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் புகுந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் வாட்ச்கள் மட்டும் விதி விலக்கா என்ன, நேரம் பார்ப்பதை தவிற உடல்நிலை குறித்து அறிந்து கொள்வது, ஜிபிஎஸ், நோட்டிபிகேஷன் என இன்றைய ஸ்மார்ட்வாட்ச்கள் பல விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ரூ.10,000க்கு கிடைக்கும் பத்து 'சத்தான' ஸ்மார்ட்போன்கள்..!

தினசரி வாழ்க்கையில் பல வேலைகளை மணிக்கட்டில் முடிக்க உதவும் இந்த கருவி வியக்க வைக்கும் தொழில்நுட்பம் என்றாலும், இதில் சிறந்த கருவி எது, எந்த மாடல் ஸ்மார்ட்வாட்ச்களை வாங்கலாம் என்பதை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்..

சோனி ஸ்மார்ட்வாட்ச் 3

சோனி ஸ்மார்ட்வாட்ச் 3

பில்ட் இன் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி கொண்ட சோனி ஸ்மார்ட்வாட்ச் 3 மற்ற ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கின்றது. அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இந்த வாட்ச் வயர்லெஸ் ஹெட்போன்களுடன் இணைந்து இசையை அனுபவிக்க வழி செய்கின்றது.

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

ஐஓஎஸ் இயங்குதளத்திற்கு தகுந்த ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை ஆப்பிள் வாட்ச் பெற்றிருக்கின்றது. வழக்கமான ஆப்பிள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு கையில் பிரமிக்க வைக்கும் கருவியாக காட்சிப்படுத்த தவறவில்லை என்றே கூற வேண்டும்.

மோட்டோ 360

மோட்டோ 360

வட்ட வடிவில் திரை கொண்ட முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையுடன் மோட்டோ 360 தலைச்சிறந்த ஆண்ட்ராய்டு அம்சங்களை வழங்குகின்றது.

பெப்பள் டைம்

பெப்பள் டைம்

வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனாலும் விற்பனையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை கண்டுகின்றது பெப்பள் டைம். தலைசிறந்த தரம் மற்றும் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளதோடு ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு பொருந்துகின்றது.

பெப்பள் டைம் ஸ்டீல்

பெப்பள் டைம் ஸ்டீல்

முந்தைய மாடல் ஸ்மார்ட்வாட்ச் கருவியை விட இந்த மாடல் தட்டையாக இருப்பதோடு ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார்மின் விவோஆக்டிவ்

கார்மின் விவோஆக்டிவ்

உடல் நிலையை சீராக வைத்து கொள்ள உதவும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்மின் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்ஜி வாட்ச் அர்பேன்

எல்ஜி வாட்ச் அர்பேன்

பாரம்பரியம் மிக்க கை கடிகாரமாக அர்பேன் உங்களது கைகளை அலங்கரிக்கும்.

சாம்சங் கியர் எஸ்

சாம்சங் கியர் எஸ்

சாம்சங் நிறுவனத்தின் சைஸன் இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் 2 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கின்றது.

கெஸ் கனெக்ட்

கெஸ் கனெக்ட்

தொழில்நுட்ப சாதணம் என்று கண்டறிய முடியாத வடிவமைப்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் கருவியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கின்றதோடு இந்த கருவி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளுடன் இணைந்து செயல்படுகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are the List of Best smartwatch in 2015. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X