பான்கார்டு உடன் ஆதார் அட்டையை ஏன் இணைக்க வேண்டும்.? இணைப்பது எப்படி.?

வரி வருவாயை தாக்கல் செய்வதற்காக நாடெங்கிலும் போலி பான் கார்டுகளை பயன்படுத்துவதைத் தடை செய்ய மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.!

By Prakash
|

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும்,அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தனிநபர் அடையளமாக எடுத்து செல்வது இந்த ஆதார்அட்டை தான். மேலும் இதில் பல்வேறு தகவல்கள் இருப்பதால் பல இடங்களில் உபயோகமாக இருக்கின்றது. மத்திய அரசு சிறப்பாக செயல்ப்பட்டு இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது மக்களுக்கு பல வகையில் நன்மை அளிக்கும் திட்டமாக செயல்படுகிறது.

தற்போது பான் கார்டில் உள்ள திருத்தங்களைப் பயன்படுத்துவதற்கான விண்ணப்பமும் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவத்துள்ளது. மேலும் பான்கார்டு வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது . இருப்பினும், இது தனிநபரின் பணபரிவர்த்தனைகளை கண்காணிக்க அரசாங்கத்திற்கு வசதியாக அமைகிறது.

ஜூலை:

ஜூலை:

ஜூலையில் உங்கள் வருமான வரித் திருப்பங்களைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான செயல்முறை கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். வரி வருவாயை தாக்கல் செய்வதற்காக நாடெங்கிலும் போலி பான் கார்டுகளை பயன்படுத்துவதைத் தடை செய்ய மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆதார் அட்டை:

ஆதார் அட்டை:

ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும். இது தனித்துவ அடையாள அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது, இவற்றில் 12 இலக்க எண் மற்றும் முகவரி, பெயர் போன்ற குறிப்புகள் இருக்கும். அரசு சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும். பான்கார்டு உடன் ஆதார்அட்டை இணைக்கும் வழிமுறை எப்படி?

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் வருமான வரித்துறையின் வலைதளத்தில் நுழையவேண்டும்(https://incometaxindiaefiling.gov.in/, i).

வழிமுறை-2

வழிமுறை-2

உள்நுழைந்த பின், பாப்-அப் விண்டோ தோன்றும். அவற்றில் பான்கார்டு உடன் ஆதார்அட்டையை இணைக்க,பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்பு உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என பார்க்கவேண்டும். விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

பாப்-அப் செய்தியை உங்கள் பான் கார்டில் உங்கள் ஆதார் அட்டையை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

நீங்கள் பாப்-அப் பிளாக்கர் செயலில் இருந்தால், "இணைப்பு விருப்பத்தை கிளிக் செய்து டாஷ்போர்டு மெனு பட்டியலில் சுயவிவர அமைப்பை நீங்களே மாற்றிக்கொள்ள முடியும்.

பான்அட்டை:

பான்அட்டை:

உங்கள் பான் கார்டின் விவரங்கள் பொருத்தமாட்டில் உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்றவை உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் பொருந்தவில்லை என்றால், நீங்கள் சரியான ஆதாரத்துடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் விவரங்களை சரி செய்ய வேண்டும். இதன் பின்னர், உங்கள் பான் கார்டை உங்கள்ஆதார் அட்டை இணைக்க முடியும்.

மத்தியஅரசு:

மத்தியஅரசு:

மேலும் ஆதார் அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும் அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்கலாம் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

வரி:

வரி:

இது பதிவு மற்றும் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக அவசியமான சான்றிதழை வழங்குகின்றது. இந்தியாவில் வரிச் செலுத்துவதில் பல்வேறு சிக்கல்களை குறைப்பதற்க்கு பான்கார்டு உடன் ஆதார்அட்டை இணைக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது மத்தியஅரசு.

Best Mobiles in India

Read more about:
English summary
Linking PAN Card to Aadhaar Card : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X