கூகுளின் புதிய நெக்சஸ் கருவியை எல்ஜி நிறுவனம் தயாரிக்கின்றதா..?

By Meganathan
|

கூகுள் நிறுவனம் நெக்சஸ் 6 கருவியின் விலையை குறைத்தவுடன் அடுத்த நெக்சஸ் கருவி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கி இருப்பதோடு புதிய கருவி குறித்த பல புரளிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக அடுத்த நெக்சஸ் கருவியினை ஹூவாய் நிறுவனம் தயாரிக்கலாம் என்று கூறப்பட்டது அனைவரும் அறிந்ததே, இதை முற்றிலும் மறுக்கும் விதமாக அமைந்துள்ளது ஆண்ட்ராய்டு பிட் தளத்தின் செய்தி குறிப்பு.

அதன் படி புதிய நெக்சஸ் கருவியினை எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் என்றும் புதிய கருவி நெக்சஸ் 5 (2015) என்றழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனம் இந்தாண்டு இரு நெக்சஸ் கருவிகளை வெளியிடும் என்றும் கூறப்பட்டது. தயாரிப்பில் இருக்கும் புதிய நெக்சஸ் 6 கருவி எல்ஜி நிறுவனம் தயாரித்தாலும் அதன் வடிவமைப்பு எல்ஜி ஜி4 போன்று இருக்காது என்று கூறப்படுகின்றது.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் புதிய கருவியில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் ஏன் நெக்சஸ் கருவிகளுக்கு இந்த மவுசு இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்..

எல்ஜி

எல்ஜி

மோட்டோரோலா நிறுவனம் தயாரித்த நெக்சஸ் 6 கருவியை விட எல்ஜி நிறுவனம் தயாரித்த நெக்சஸ் 5 கருவி அதிக பிரபலமடைந்தது.

தேர்வு

தேர்வு

எல்ஜி நிறுவனம் தயாரித்து பிரபலமடைந்த காரணத்தினால் தான் புதிய நெக்சஸ் 5 (2015) கருவியை தயாரிக்க எல்ஜி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உறுதி

உறுதி

புதி்ய நெக்சஸ் கருவியை தயாரிப்பது குறித்து இரு நிறுவனங்களிடம் இருந்தும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு எம்

ஆண்ட்ராய்டு எம்

கூகுளின் அடுத்த இயங்குதளமான ஆண்ட்ராய்டு எம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய நெக்சஸ் கருவியின் வெளியீட்டு தேதி குறித்த எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் கருவியில் 5.7 இன்ச் டிஸ்ப்ளேவும், எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் கருவியில் 5.2 இன்ச் டிஸ்ப்ளேவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

புதிய கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 808 எஸ்ஓசி மற்றும் 2700 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நெக்சஸ்

நெக்சஸ்

நெக்சஸ் கருவியில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

இயங்குதளம்

இயங்குதளம்

மற்ற ஆண்ட்ராய்டு இயங்குதளங்களை போன்று இல்லாமல் நெக்சஸ் கருவிகளில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு வழங்கப்படும் இது கூகுளின் பிரத்யேக இயங்குதளமாகும்.

அப்டேட்

அப்டேட்

மற்ற ஆண்ட்ராய்டு கருவிகளை விட நெக்சஸ் கருவிகளுக்கு புதிய அப்டேட்கள் முதலில் வழங்கப்படும்.

தரம்

தரம்

நெக்சஸ் கருவிகளின் தரம் அனைவரும் அறிந்ததே, இவை எப்பவும் உலகின் தலை சிறந்த ஸ்மார்ட்போனாக மட்டுமே இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
It is rumoured that LG may be making the next Nexus phone, tentatively called Nexus 5 (2015). In the following slides you will find the full details regarding the New Nexus we have right now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X