இந்திரா காந்தியின் கேள்வியும், ராகேஷ் ஷர்மாவின் பதிலும்..!

|

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்த ராகேஷ் ஷர்மா தான் விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். சுமார் ஒன்றரை ஆண்டு பயிற்சிக்குபின் 1984-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று ராகேஷ் ஷர்மா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

இந்திரா காந்தியின் கேள்வியும், ராகேஷ் ஷர்மாவின் பதிலும்..!

இன்று வரையிலும் கூட ராகேஷ் ஷ்ரமா பற்றி பெரும்பாலான இந்தியர்களுக்கே தெரியாது என்பது தான் நிதர்சனம். ராகேஷ் ஷர்மா எவ்வளவு சுவாரசியமான மனிதர் என்பதை அவரை பற்றி சில விடயங்களை தெரிந்து கொண்டால் தான் புரியும். முக்கியமாக, பாகிஸ்தானிய ராணுவ வீரருக்கு உதவியது, இந்திரா காந்தி கேட்ட கேள்விக்கு அழகாக பதில் அளித்தது உட்பட பல..!

எதிரிக்கும் மரியாதை :

எதிரிக்கும் மரியாதை :

இந்தியாவிற்காக யுத்த களத்திலும் ராகேஷ் ஷர்மா பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாக, பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தம் ஒன்றில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காயப்பட்டு துப்பாக்கி சூட்டை நிறுத்திக்கொள்ளுமாறும், அப்போது தான் இறந்தவர்களை நாங்கள் தூக்கி செல்ல முடியும் என்றும் கூறி வெள்ளை கொடியை காட்டியபோது அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு துப்பாக்கி சூட்டை நிறுத்துக்கொண்டார் ராகேஷ்..!

யோகோ :

யோகோ :

ரஷ்யர்களுடன் விண்வெளிக்கு செல்லும்முன் விண்வெளியில் உள்ள ஸீரோ கிராவிட்டி மூலம் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க ராகேஷ் ஷர்மா யோகோவை பயன்படுத்தினார், அதை ரஷ்யர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார்.

மீக்- 21 ரக போர் விமானம் :

மீக்- 21 ரக போர் விமானம் :

ஷர்மா பலவகையான விமானங்களை சோதனை செய்பவரும் கூட, அப்படியாக ஒருமுறை இந்தியாவின் நாசிக் நகரத்தின் மேல் மீக்- 21 ரக போர் விமானத்தில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பினார்.

இந்தியா எப்படி இருக்கும் :

இந்தியா எப்படி இருக்கும் :

அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி "விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்தியா எப்படி இருக்கும்.?" என்று ஷ்ரமாவிடம் கேட்க உடனே அவர் "ஒட்டுமொத்த பூமியை விடவும் அழகாக இருக்கும்..!" என்று பெருமையாக கூறினார்..!

நிலவில் தரை இறங்கவில்லை :

நிலவில் தரை இறங்கவில்லை :

ராகேஷ் ஷர்மா நிலாவிற்கு சென்றவர் என்ற ஒரு பொய்யான கதை நிலவுகிறது. ஆனால், அவர் விண்வெளியில் இருந்துள்ளாரே தவிர நிலவில் தரை இறங்கவில்லை என்பது தான் உண்மை.

சீஸ் கேக் :

சீஸ் கேக் :

ரஷ்யாவில் நீங்கள் இருந்த நாட்களில் எதை மிகவும் தவற விடுவதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு "ப்ளாக் கேவியர் அண்ட் ஜபேகன்கா" (ரஷ்யாவின் சீஸ் கேக்) என்று சொல்லி அனைவரையும் புன்னகைக்க வைத்தார் ரகேஷ் ஷர்மா.!

விண்வெளியில் இந்திய உணவு :

விண்வெளியில் இந்திய உணவு :

விண்வெளியில் ரஷ்யர்களுக்கு முதன்முதலில் இந்திய உணவு சமைத்து வழங்கியதும் ரகேஷ் ஷர்மா தான், சுஜி ஹல்வா, ஆளு சோலே மற்றும் வெஜிடெபல் புலாவ் சமைத்து வழங்கினார்.

அசோக் சக்ரா விருது :

அசோக் சக்ரா விருது :

ராகேஷ் ஷர்மாவிற்கு இந்தியாவின் மிகவும் கவுரவமான விருதான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ ஆஃப் சோவித் யூனியன் :

ஹீரோ ஆஃப் சோவித் யூனியன் :

விண்வெளியில் இருந்து திரும்பியதும் ரஷ்ய அரசாங்கம் 'ஹீரோ ஆஃப் சோவித் யூனியன்' (Hero of Soviet Union) விருதை வழங்கி ராகேஷ் ஷர்மாவை கவுரப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ரஷ்யா நடத்திய விபரீத பரிசோதனை, சீனாவுடன் போட்டி..?!


விண்வெளி சட்டங்களாவது காப்பாற்றப்படுகின்றனவா.??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Lesser Known Facts About India’s First Astronaut – Rakesh Sharma. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X