மீண்டும் நெட்டில் லீக் ஆன லெனோவோ சூக் எட்ஜ்.!!

லெனோவோ சார்பில் விரைவில் வெளியாக இருக்கும் சூக் எட்ஜ் போனின் புகைப்படங்கள் மீண்டும் நெட்டில் லீக் ஆகியுள்ளது.

Written By:

லெனோவோவின் சூக் நான்காம் கருவி மீண்டும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. லெனோவோ சூக் எட்ஜ் என அழைக்கப்படும் இந்த கருவியில் எதிர்பார்த்தைத் போல் வளைந்த டிஸ்ப்ளே இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.

வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் வேறு என்னென்ன தெரியவந்திருக்கிறது என்பதை தொடர்ந்து பார்ப்போமா.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வெய்போ

லெனோவோ சூக் எட்ஜ் புகைப்படங்கள் சீனாவின் வெய்போ தளத்தில் கசிந்திருக்கிறது. இவை இந்த போன் மிகவும் மெல்லியதாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

சான்று

லெனோவோ சூக் எட்ஜ் சீனாவின் சான்றிதழ் தளமான TENAA'வில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. ரகசியமாக கசிந்திருக்கும் தகவல்களின் படி இந்த போனில் 5.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 1080 பிக்ஸல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராசஸர்

சூக் எட்ஜ் கருவியில் 2.35 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கலாம்.

இயங்குதளம்

லெனோவோ சூக் எட்ஜ் கருவியானது ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மூலம் இயங்கும் என்றும் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பீ கேமரா உள்ளிட்டவை கொண்டிருக்கும் என்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் தெரிகிறது.

கனெக்டிவிட்டி

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த கருவியில் 4ஜி, LTE, NFC, வை-பை, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீனாவில் இந்த கருவி இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்றும் உலகளவில் 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Lenovo Zuk Edge with 4GB RAM leaked online
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்