ஒரே மாடல் மூலம் ரூ.100 கோடி விற்பனை : மொபைல் போன் நிறுவனம் அதிரடி!

Written By:

100 கோடி அப்பு - தமிழ்ப் படம் ஒன்றில் வரும் நகைச்சுவை வசனம் போல் அமைந்துள்ளது லெனைவோ நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு.

லெனோவோ நிறுவனம் லெனோவோ வைப் கே5 நோட் எனும் புதிய கருவியினை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் இந்தக் கருவியின் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விற்பனை

அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி அந்நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

வாரம்

கடந்த வார இறுதியில் விற்பனை மதிப்பு ரூ.100 கோடி என்றும் வைப் கே5 நோட் கருவியானது வெளியானது முதல் சிறப்பான விற்பனையைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அம்சங்கள்

லெனோவோ வைப் கே5 நோட் கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி10 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரியை பொருத்த வரை 3 ஜிபி / 4 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமராவை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட வைப் கே5 நோட் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் 4ஜி, எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி

இத்தனை அம்சங்கள் கொண்ட வைப் கே5 நோட் 3500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு பிளாட்டினம் சில்வர், ஷேம்பெயின் கோல்டு மற்றும் கிராஃபைட் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Lenovo Sold Rs 100 Crores Worth Vibe K5 Note on Flipkart Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்