ஸ்மார்ட்போன் சந்தை எதிரிகளை 'பேயாடப்போகும்' லெனோவா பேப் 2 ப்ரோ.!

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக களமிறங்கும் லெனோவா பேப் 2 ப்ரோ கருவி பற்றி கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

|

கூகுள் நிறுவனத்தில் மதிப்பு மிக்க திட்டங்களில் ஒன்றான டாங்கோவின் முதல் ஸ்மார்ட்போன் ஆன லெனோவா பேப் 2 ப்ரோ இறுதியாக நவம்பர் 1, 2016-ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் ஏஆர் தொழில்நுட்பம் கொண்டு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் இந்த வருடத்திலேயே பல முறை வெளியாகும் என்று நம்பப்பட்டு வெளிவராமலேயே போனது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறைதிட்டவட்டமாக வெளியாக இருக்கும் இக்கருவியானது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சந்தையில் நிகழ்த்தப்போகும் புரட்சிகள் அதிகம் என்றே கூறலாம்.

ப்ராஜெக்ட் டாங்கோ

ப்ராஜெக்ட் டாங்கோ

டாங்கோ ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனை சுற்றியுள்ள 3டி பொருட்களை பதிவு செய்ய உதவும். இதன் மூலம் மேப்பிங், நேவிகேஷன், கட்டடக்கலை வடிவமைத்தல், கேமிங் போன்றவைகளின் வழக்கமான நிலையே மாறி முற்றிலும் புதியதொரு அனுபவத்தை பெறலாம்.

விளையாட்டு அரங்கு

விளையாட்டு அரங்கு

கூகுள் ப்ராஜெக்ட் ஆன டாங்கோ உங்கள் வீட்டை வேறுபட்ட உலகமாக உருவாக்க உதவும் அதாவது ஒரு முற்றிலுமான மெய்நிகர், அழகுமிக்க சூழலிலை காண அனுமதிக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உள்ளடக்கம்

உள்ளடக்கம்

இதன் அம்சங்களும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு இணையாகவே உள்ளது.
டிஸ்ப்ளே : 6.4-இன்ச் க்யூஎச்டி (1440x2560)
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட்
ரேம் : 4ஜிபி
உள்ளடக்க சேமிப்பு : 64ஜிபி
பேட்டரி : 4050 எம்ஏஎச்
பின்பக்க கேமிரா : 16எம்பி
முன்பக்க கேமிரா : 8எம்பி

அமரிக்க -இந்திய பயனர்கள்

அமரிக்க -இந்திய பயனர்கள்

அமெரிக்காவில் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் இந்த கருவியானது இந்திய நுகர்வோர்களை சற்று தாமதமாகவே வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலை

இந்த ஸ்மார்ட்போன் 499 டாலர்கள்விலை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது இந்திய மதிப்பில் சுமார் சுமார் ரூ. 33,360/-.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

மோட்டோ இ3 பவர் ரூ.499/- மட்டுமே?

Best Mobiles in India

Read more about:
English summary
Lenovo Phab 2 Pro Launching on Nov 1: 5 Reasons Why It Could Disrupt Mid-Range Smartphone Market. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X