ஜியோ சேவையுடன் வெளியான லெனோவோ ஸ்மார்ட்போன்கள், விலை குறைவு தான் பாஸ்.!!

By Meganathan
|

லெனோவோ நிறுவனம் சார்பில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்று புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லெனோவோ ஏ6600, ஏ7700 மற்றும் ஏ6600 பிளஸ் என மூன்று கருவிகளிலும் 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரகத்தில் வெளியாகியிருக்கும் இந்தக் கருவிகளுடன் இலவச ரிலையன்ஸ் ஜியோ சேவையும் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை லெனோவோ ஏ6600 கருவியில் 5.0 இன்ச் எச்டி திரை, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6735பி குவாட்-கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. லெனோவோ ஏ6600 பிளஸ் கருவியில் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி:

மெமரி:

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா பிளாஷ் மற்றும் 2300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

லெனோவோ ஏ7700:

லெனோவோ ஏ7700:

லெனோவோ ஏ7700 கருவியில் 5.5 இன்ச் எச்டி திரை 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் 6735பி பிராசஸர் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி பிரைமரி கேமரா டூயல் எல்இடி பிளாஷ், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ மற்றும்
2900 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

இந்தியாவில் லெனோவோ ஏ6600 ரூ.6,999, ஏ7700 ரூ.8,540 விலைக்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ6600 பிளஸ் கருவியின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.

வரவேற்பு:

வரவேற்பு:

கடந்த ஆண்டு லெனோவோ ஏ சீரிஸ் கருவிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன, குறிப்பாக ஏ6000, ஏ6000 பிளஸ் மற்றும் ஏ7000 கருவிகள் அதிகம் விற்பனையாகின. இதே போல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஏ6600, ஏ6600 பிளஸ் மற்றும் ஏ7700 சீரிஸ் கருவிகளும் நல்ல வரவேற்பைப் பெறும் என லெனோவோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Lenovo launched A6600, A6600 Plus and A7700 smartphones with Jio Preview offer Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X