3ஜிபி ரேம் கொண்ட லெனோவோ கே4 நோட் : ஜனவரி வெளியீடு.!!

Written By:

ட்வட்டர் மூலம் லெனோவோ நிறுவனம் தனது புதிய கருவி சார்ந்த தகவல்களை உறுதி செய்திருக்கின்றது. அதன் படி லெனோவோ கே4 நோட் கருவியில் 3ஜிபி ரேம் இருக்கும் என்றும் இந்த கருவி ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த கருவியானது மீடியாடெக் ஹூலியோ எக்ஸ்10 பிராசஸர் மற்றும் 32ஜிபி இன்டர்னலெ மெமரியும் கொண்டிருக்கும் என்றும் மெட்டாலிக் ஃபிரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம் கொண்ட லெனோவோ கே4 நோட் : ஜனவரி வெளியீடு.!!

இந்த கருவியின் மற்ற சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. லெனோவோ கே3 நோட் கருவியில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 4ஜி, ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளமும் கொண்டிருக்கின்றது. இதோடு 64-பிட் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் எம்டி6572 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருந்தது.

கேமராவை பொருத்த வரை கே3 நோட் கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கின்றது. இதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமகியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க :

கரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து தரவுகளை மீட்பது எப்படி.??
டச் ஸ்கிரீனினை சுத்தம் செய்வது எப்படி??
ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.??
ஆன்லைன் ஷாப்பிங்.! கவனமாக இருப்பது எப்படி.??
ஸ்மார்ட்போன் வேகத்தை நீட்டிக்க ரீசெட் செய்வது எப்படி??

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Lenovo K4 Note with 3GB RAM set to launch on 5 January. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்