புதிய அத்தியாயம் படைத்த சூப்பர் டிவி விற்பனை.!

Written By:

உலக பிரபலமாகி வரும் லீஇகோ நிறுவனம் தொழில்நுட்ப சந்தையில் புதிய வரலாறு படைத்திருக்கின்றது. அதன் படி அந்நிறுவனம் சுமார் 1200க்கும் அதிகமான சூப்பர் டிவிக்களை விற்பனை செய்துள்ளது. இத்தனை கருவிகளும் மூன்று நாட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது சந்தையில் புதிய சாதனையாகியுள்ளது.

இந்த சூப்பர் டிவிக்களுக்கான விற்பனை ஆகஸ்டு 10 -12 ஆம் தேதிகளில் லீ இகோ நிறுவனத்தின் சொந்த லீமால் இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் நடைபெற்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விற்பனை

இந்திய டிவி சந்தையில் சூப்பர்3 சீரிஸ் வகை கருவிகளின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே லீஇகோ கருவிகள் முதலிடம் பிடித்தன.

பிரான்டு

புதிய வகை டிவிக்கள் சந்தையில் முன்னணி பிரான்டாகாவும் உருவெடுத்துள்ளது. இதோடு ஸ்மார்ட் டிவி சந்தையிலும் லீஇகோ சூப்பர் கருவிகள் முன்னணி இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்சம்

புதிய அம்சங்கள் மற்றும் குறைந்த விலையில் கருவிகளை வழங்கி லீஇகோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கின்றது. இதோடு இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களிலேயே முன்னணி ஆன்லைன் பிரான்டு என்ற அந்தஸ்தை லீஇகோ பெற்றுள்ளது.

இலவசம்

லீஇகோ சூப்பர் டிவி வகைகளோடு ரூ.9,800 மதிப்புள்ள லீஇகோ சந்தா இலவசமாக வழங்கபர்படுகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகளவு திரைப்படங்கள் மற்றும் இசையை அனுபவிக்க முடியும்.

மெட்டல்

லீஇகோ சூப்பர் டிவி வகைகளில் உறுதியான மெட்டல் வடிவமைப்பு மற்றும் 4கே அல்ட்ரா எச்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதால் துல்லியமான படங்களை அனுபவிக்க முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LeEco Super3 TVs create a new milestone in Indian TV Industry
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்