சூப்பர் டிவி விற்பனை : முதல் நாளிலேயே 10,000 பேர் முன்பதிவு செய்து சாதனை.!!

Written By:

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் லீஇகோ நிறுவனம் புது வகை தொலைக்காட்சிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. சூப்பர் 3 சீரிஸ் பெயரில் மூன்று மாடல்களை வெளியிட்டிருக்கும் லீஇகோ அவற்றை பிளாஷ் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளை இது போன்ற முறையில் விற்பனை செய்வது இதுவே முதல் முறையாகும். லீஇகோ நிறுவனம் தனது சூப்பர்3 சீரிஸ் டிவி வகைகளுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முன்பதிவு

லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களில் முதல் பிளாஷ் விற்பனையானது ஆகஸ்டு 26 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இந்தக் கருவிகளுக்கான முன்பதிவில் மொத்தம் 10,000 பேர் லீஇகோ சூப்பர்3 தொலைக்காட்சிகளை முன்பதிவு செய்துள்ளனர்.

உயர்வு

தொலைக்காட்சி விற்பனையைப் பொருத்த வரை மிகக் குறைந்த காலகட்டத்தில் லீஇகோ நிறுவனம் அதிவேக உயர்வைச் சந்தித்துள்ளது. தொலைக்காட்சிகளை பிளாஷ் விற்பனை செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் லீஇகோ நிறுவனம் பெற்றுள்ளது.

நிரூபணம்

லீஇகோ சூப்பர்3 டிவி வகைகளின் முன்பதிவு எண்ணிக்கை லீஇகோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருப்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது.

காரணம்

அதிகளவு அம்சங்கள், அழகிய வடிவமைப்பு மற்றும் குறைந்த விலை போன்றவை லீஇகோ டிவிக்களின் அதிவேக முன்பதிவிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

சந்தா

லீஇகோ சூப்பர் டிவி வாங்கும் போது உடன் 2 ஆண்டு சந்தா கிடைப்பதால் 2000 ஃபுல் எச்டி / ஹெச்டி திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் 100க்கும் அதிமகான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 50க்கும் அதிகமான நேரலை நிகழ்ச்சிகளைக் காணும் வசதி போன்றவை வழங்கப்படுகின்றது. இதோடு சூப்பர் டிவியுடன் 5 டிபி அளவு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LeEco garners a record 10,000 registrations for its EcoTVs on day 1
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்