அப்போ போட்டோ இப்போ வீடியோ, ரகசியமாய் கசிந்த ஐபோன் 7 வீடியோ.!?

Written By:

பல மாதங்களாக இது தான் அடுத்த ஐபோன், இந்த அம்சங்கள் நிச்சயம் இருக்கும் எனப் பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகின. ஆப்பிள் சார்பில் வழக்கம் போல எவ்வித பதிலும் இல்லை. இருந்தும் மக்கள் ஓய்ந்ததாய் இல்லை. முன்பு ஐபோன் 7 இப்படித் தான் இருக்கும் எனப் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகின. கருவி இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஐபோன் 7 வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஐபோன் 7 கருவி குறித்து வெளியாகியிருக்கும் வீடியோ மூலம் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கலாம் என்பதைத் தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வீடியோ

சீனாவின் வெய்போ பயனர் ஒருவர் பதிவு செய்த வீடியோ யூட்யூப் தளத்தில் 9to5Mac என்ற சேனல் பதிவேற்றம் செய்திருக்கின்றது.

வீடியோ

இந்த வீடியோவில் ஐபோன் 7 கருவி ஐபோன் 6எஸ் கருவியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. வீடியோ முழுக்கச் சீன மொழியில் இருக்கின்றது.

அம்சம்

வீடியோவில் ஐபோன் 7 கருவியைப் பார்க்கும் போது வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள், பெரிய கேமரா மற்றும் ஹெட்போன் ஜாக் அகற்றப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

ஹெட்போன் ஜாக்

புதிய ஐபோன் கருவியில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்ற தகவல் சில காலமாக இணையதளங்களில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இதே போல் வெளியான வீடியோவிலும் ஐபோன் கருவியில் ஹெட்போன் ஜாக் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 7

முன்னதாக வெளியான ஐபோன் 7 போட்டோக்களிலும் பெரிய அளவு கேமரா இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இவை அனைத்தும் உண்மையில் ஐபோன் 7 கருவி இது தான் என்பதை நம்ப வைப்பாக அமைகின்றன.

போலி

சீன சமூகவலைத்தளங்களில் போலி ஐபோன்களைத் தயாரிப்போர் முன்னதாகப் பலமுறை இது போன்ற வீடியோக்களைப் பதிவேற்றம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் புதிய ஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் நிச்சயம் அகற்றப்படலாம் என்பதே சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

மென்பொருள்

இந்த வீடியோவில் ஐபோன் கருவியின் வெளிப்புறம் மட்டுமே விவாதிக்கின்றது, மாறாகக் கருவியினுள் வழங்கப்பட்ட ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் சார்ந்த தகவல்கள் ஏதும் விவரிக்கப்படவில்லை.

மெமரி

இதுவரை வெளியான தகவல்களில் ஐபோன் 7 கருவியில் குறைந்த அளவு மெமரி 32 ஜிபி வரை உயர்த்தப்படுவதோடு அதிகபட்சமாக 256 ஜிபி மெமரி கொண்ட கருவியும் அறிமுகம் செய்யப்படலாம்.

கேமரா

ஐபோன் 7 கருவியில் 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம். இதோடு முன்பை விட அதிகளவு கேமரா அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வீடியோ

ஐபோன் 7 குறித்து ரகசியமாக வெளியான வீடியோவினை பாருங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Leaked Video shows feasible iPhone 7 without headphone jack Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்