பைத்தியக்காரத்தனமான வேகத்தில் ஜியோ ஜிகாபைபர் : 'லீக்' தகவல்கள்..!

Written By:

மிகவும் எதிர்பார்த்தபடி, ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 'ஜியோ ஜிகாபைபர்' பிராட்பேண்ட் திட்டத்தை துவங்க இருக்கிறது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வெல்கம் ஆஃபர் இதிலும் வழங்கப்படும் என்று எதிரிபார்க்கப் படுகிறது.

இந்த சேவையை ரிலையன்ஸ் ஜியோ எப்போது முன்னெடுக்கும் என்ற உண்மையான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வெளியான ஒரு அறிக்கையின் படி, ஜியோ ஜிகாபைபர் சேவையின் முதல்கட்ட சோதனையானது தில்லி மற்றும் மும்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது, உடன் ஜியோ ஜிகாபைபறில் என்னென்னெ எதிர்பார்க்கலாம் என்ற முக்கியமான தகவல்களும் கசிந்துள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆரம்ப விலை :

கசிந்த அறிக்கையின்படி, ஜியோ ஜிகாபைபர் திட்டமானது ரூ.500-ல் தொடங்கி ரூ.5,500 வரை செல்லும், உடன் ரூ.500/-க்கு அதிகபட்சமாக 600ஜிபி டேட்டா வழங்கப்பட்டு அது 28 நாட்கள் செல்லுபடியாகும் படி இருக்கலாம்.

ஒரு நாள் பேக் :

ரூ.500 என்ற ஆரம்ப விலையை தவிர்த்து அதை விட குறைவான விலையில் அதாவது ரூ.400/-க்கு ஒரு திட்டமும் எதிரிபார்க்கப்படுகிறது.

அதிகபட்ச வேகம் :

அது ஒரு நாள் நீடிக்கும் என்றும் உடன் அதிகபட்ச வேகத்தில் வரம்பற்ற தரவு பயன்பாட்டை வழங்கும் என்கிறது 'லீக்' ஆன தகவல்.

வேகம் :

முன்பு கூறியது போல அதிகபட்ச விலை கொண்ட ரூ.5,500 திட்டம் ஆனது 300ஜிபி அளவிலான தரவு எல்லை கொண்டு 30 நாட்கள் நீடிக்கும் என்றும் இந்த பேக் பைத்தியக்காரத்தனமான 600எம்பிபிஎஸ் வேகம் வழங்கும் என்று லீக் செய்தி கூறுகிறது.

200ஜிபி :

ரூ.1,500 பேக் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் மற்றும் 200ஜிபி அளவிலான தரவு எல்லை கொண்டு 50எம்பிபிஎஸ் வேகத்தில் தரவை அனுபவிக்க முடியும்

பிற சலுகைகள், ரூ.2000 :

அதே போன்ற ரூ.2000 என்ற திட்டம் 100எம்பிபிஎஸ் வேகம் வழங்குகிறது.

ரூ.4,000 :

ரூ.4,000 என்ற பேக் 500ஜிபி வரையிலான தரவை 400எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குகிறது.

ரூ.3500 :

மற்றொரு பேக் ஆன ரூ.3500 ஆனது 200எம்பிபிஎஸ் வேகத்தில் 750ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அனைத்து சலுகைகளும் 30 நாட்கள் செல்லத்தக்கது.

மேலும் படிக்க :

ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பதிலடி கொடுக்கும் பிஎஸ்என்எல்-ன் பிபிஜி1199..!
ரூ.19-ல் இருந்து ஆரம்பிக்கும் ஜியோவின் வரம்பற்ற 4ஜி சலுகைகள் (முழு விவரம்)..!
உங்கள் நெட்வெர்க்கில் டாக்டைம் மற்றும் டேட்டா கடன் பெறுவது எப்படி.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படங்கள் : போன் ரேடார்English summary
LEAKED: Things to Know About Reliance Jio GigaFiber Broadband Service Launching Soon. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்