வெறி கொண்டு தயாராகும் நோக்கியா.!?

Written By:

நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் நோக்கியா பிரான்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிட முடியும். அதன் படி இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு துவங்கி விட்ட நிலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதோடு நோக்கியா நிறுவனம் பல்வேறு கருவிகளை வெளியிட தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இது குறித்து இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தயாரிப்பு

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை ஃபின்லாந்தை சேர்ந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் தயாரிக்கலாம், இந்நிறுவனம் நோக்கியா பிரான்டு கருவிகளை விற்பனை செய்யும் உரிமையை பத்தாண்டுக் காலமாக வைத்திருக்கின்றது.

நிறம்

வெளியாக இருக்கும் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் வழக்கம் தவறாமல் நோக்கியாவின் பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் பல்வேறு நிறங்களில் வெளியாகலாம் எனக் கூறப்படுகின்றது.

ஸ்னாப்டிராகன் 820 SoC

இந்த ஆண்டு மட்டும் குறைந்த பட்சம் இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என்றும் இவை சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் மற்றும் குவிக் சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மெட்டல்

மேலும் இந்த நோக்கியா கருவிகள் முழுமையான மெட்டல் வடிவமைப்பு மற்றும் ஐபி68 சான்று கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இந்தச் சான்று கருவிகளை வாட்டர் ப்ரூஃப் கொண்டவையாக உறுதி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு நௌக்கட்

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் மற்றும் Z லான்ச்சர் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கலாம்.

கேமரா

இதோடு நோக்கியா ஸ்மார்ட்போன் கருவியில் 22.6 எம்பி பிரைமரி கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

தரம்

நோக்கியா கருவிகளில் வழங்கப்படும் கைரேகை ஸ்கேனர் மற்ற கருவிகளை விட அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா பி1

நோக்கியா பிரான்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நோக்கியா பி1 (P1) என அழைக்கப்படலாம் என்றும் இந்தக் கருவியானது இன்ஃபோகஸ் / ஷார்ப் பொறியாளர்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலை

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகள் 2கே டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் இவற்றின் விலை ரூ.33,549 வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சோதனை

இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் நோக்கியா கருவிகள் சோதனை மற்றும் இதர பணிகளின் காரணமாக வெளியீடு தாமதமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LEAKED Nokia Android Phones Reveals it Could have Android Nougat Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்