மீண்டும் பழைய ரூட் ரெடியான சாம்சங் : இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்.!!

Written By:

'வாழ்க்கை ஒரு வட்டம், டா' என்ற விஜய் வசனம் தான் நினைவிற்கு வருகின்றது.

சாம்சங் நிறுவனம் மீண்டும் பழைய பாதையில் பயணிக்க தயாராகி வருவது இணையத்தில் ரகசியமாய் கசிந்த புகைப்படங்களின் மூலம் தெரியவந்திருக்கின்றது. செல்பீ காலத்தில் கருப்பு வெள்ளை புகைப்படங்களின் மேல் ஆர்வம் அதிகரிப்பதைப் போல் சாம்சங் நிறுவனமும் பழைய பஞ்சாங்கத்தைக் கையில் எடுத்துள்ளது.

மீண்டும் பழைய ரூட் ரெடியான சாம்சங் : இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்.!

அப்படி சாம்சங் நிறுவனம் என்ன செய்ய போகின்றது, ஏன் இந்த ஆர்ப்பரிப்பு, வீண் விளம்பரம்..??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பிளிப் போன்

சாம்சங் நிறுவம் மீண்டும் பிளிப் வகை மொபைல் போன்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதை உணர்த்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கேலக்ஸி ஃபோல்டர்

கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி ஃபோல்டர் கருவியின் அடுத்த மாடல் கருவியாக கேலக்ஸி ஃபோல்டர் 2 கருவி உருவாக்கப்பட்டு வருவதாக ஸ்மார்ட்போன் சந்தை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

நிறம்

புதிதாய் வெளியாகியிருக்கும் கேலக்ஸி ஃபோல்டர் 2 கருவியின் புகைப்படங்கள் இந்தக் கருவி கோல்டு நிறம் கொண்டிருக்கும் என்பதைத் தெரியப்படுத்தியுள்ளது.

அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 கருவியில் 3.8 இன்ச் WVGA டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேமரா

8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் இந்தக் கருவியானது 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

கனெக்டிவிட்டி

மற்ற ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் சப்போர்ட், ப்ளூடூத், வை-பை வழங்கப்படும். இந்தக் கருவியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

வெளியீடு

சீனாவில் இந்தக் கருவி விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்திய வெளியீடு சற்றே தாமதமாகலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இது குறித்து சாம்சங் சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Leaked images expose Samsung flip smartphone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்