நெட்'இல் லீக் ஆனது நோக்கியா டேப்ளெட் இல்லை, ஸ்மார்ட்போன் தான்.!

சில காலமாக இணையத்தில் உலாவி வந்த நோக்கியா புதிய கருவி குறித்த பல்வேறு புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றது.

Written By:

நவம்பர் மாதம் ஆகிவிட்டது, நோக்கியா போன் எங்கே எனப் பலரும் கேட்கத் துவங்கி விட்டனர். அவ்வப்போது நோக்கியா D1C புதிய கருவி குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்தன. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என இதுவரை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய நோக்கியா D1C வெளியாக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்கிறது, சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள். அதன் படி புதிய நோக்கியா D1C கருவியானது 2017 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் MWC விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டேப்ளெட்

நோக்கியாவின் D1C ஆண்ட்ராய்டு கருவி சில காலமாக டேப்ளெட் எனக் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் கசிந்திருக்கும் புகைப்படம் நோக்கியா D1C கருவி டேப்ளெட் கிடையாது இது ஸ்மார்ட்போன் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தகவல்கள்

இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய நோக்கியா D1C போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஆக்டா-கோர் பிராசஸர், அட்ரினோ 505 GPU கொண்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது. இது கிட்டத்தட்ட ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே

புதிதாய்க் கசிந்திருக்கும் புகைப்படங்கள் இந்தக் கருவி நிச்சயம் ஸ்மார்ட்போன் தான் என்பதை மட்டும் உறுதி செய்திருக்கும் நிலையில் இதன் டிஸ்ப்ளே 5.0 அல்லது 5.5 இன்ச் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மெமரி

புதிய நோக்கியா D1C கருவியில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது. சில தகவல்கள் இந்தக் கருவி ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கின்றன.

கேமரா

நோக்கியா D1C கருவியில் 16 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ் மற்றும் பிளாஷ் அம்சமும் 8 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது. முன்பக்க கேமராவில் பிளாஷ் வழங்கப்படுவது குறித்துத் தகவல்கள் ஏதும் இல்லை, என்றாலும் இரு கேமராக்களும் 1080P ரெசல்யூஷனில் வீடியோக்களைப் பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படம்: WeiboEnglish summary
leak images reveals Nokia D1C is a phone not a tablet
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்