இணைய உலகம் : அதிர வைக்கும் உண்மை நிலவரங்கள்.!!

By Aruna Saravanan
|

உலகமே இண்டர்நெட்டில் இயங்கும் போது அதில் தவறுகள் நடக்காது என்றால் அது பொய்யே. இதை தவிர்க்க நாமும் கவனமாக இருக்க வேண்டும். இணையத்தளத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அவற்றின் பயனை பெறும் போது அனைவரும் தங்களது பாதுகாப்பையும் மனதில் வைத்து கொள்வது நல்லது.

இங்கு 'Internet Of Things' எனும் இணைய உலகம் பற்றிய உண்மைகளை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்:

ஏடிஎம்

ஏடிஎம்

1974ஆம் ஆண்டு ஏடிஎம் முதன் முதலில் IoTயை எடுத்து கூறும் விதமாக ஆன்லைனில் வந்தது.

இண்டர்நெட் பயன்பாடு

இண்டர்நெட் பயன்பாடு

2008ஆம் ஆண்டில் மக்கள் அதிக அளவில் இண்டர்நெட் கொண்டிருந்தனர். 2015ஆம் ஆண்டின் இறுதியில் 4.9 பில்லியன் அளவிற்கு இண்டர்நெட்டுடன் இணைந்து இருந்தனர். 2020 ஆம் ஆண்டில் அதுவே 50 பில்லியனை தொட்டு விட்டது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

2015ஆம் ஆண்டு 1.4 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் 2020ஆம் ஆண்டில் 6.1 பில்லியன் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களை எதிர்பார்க்கலாம்.

வீட்டு உபயோக பொருட்கள்

வீட்டு உபயோக பொருட்கள்

வீட்டு உபயோக பொருட்களுடன் இணைய உலகம் அதிக அளவில் தொடர்பில் உள்ளது. இதனால் தற்பொழுது கூகுள் ஸ்மார்ட் தெர்மோஸ்டேட் மேக்கரை அறிமுகப்படுத்தி உள்ளது.

வாகனம்

வாகனம்

2020ஆம் ஆண்டில் எண்ணற்ற வாகனங்கள் இண்டர்நெட்டு மூலம் இணைக்கப்பட்டுவிடும். வாகனங்களின் சேவை மற்றும் இயக்கமும் இண்டர்நெட் தொடர்பில் வந்துவிடும். கூகுளின் தானியங்கி கார்கள் தற்பொழுது ஒரு வாரத்திற்கு 10,000 மைல்களை கடக்கின்றது.

அணியக்கூடிய கருவிகள்

அணியக்கூடிய கருவிகள்

2015ஆம் ஆண்டு அணியக்கூடிய கருவிகள் உலக அளவில் 223% இடத்தை பிடித்துள்ளது. இதில் ஃபிட்பிட் 4.4 மில்லியன் கருவிகளை இறக்குமதி செய்துள்ளது. மற்றும் ஆப்பில், 3.6 மில்லியன் ஆப்பிள் கைகடிகாரங்களை கொண்டுவந்துள்ளது.

ஸ்மார்ட் துணி

ஸ்மார்ட் துணி

துணிகளும் இதில் அடங்கும். 10.2 மில்லியன் யுனிட்ஸ் ஸ்மார்ட் துணிகள் 2020ஆம் ஆண்டுக்குள் இறக்குமதி செய்யப்படும். இது 2013ஆம் ஆண்டின் 140,000யூனிட்ஸை ஒப்பிடும் போது மிகவும் அதிகம்.

ரேடியோ ஃப்ரீக்வன்சி

ரேடியோ ஃப்ரீக்வன்சி

Radio Frequency Identification (RFID) டேப்ஸின் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி தரவுகளை பயன்படுத்தவும், பொருட்களை கண்டுபிடிக்கவும் முடியும். இது $11.1 பில்லியன். மேலும் 2020இல் $21.9 அளவிற்கு உயரும் என்று நம்பப்படுகின்றது.

Machine-to-machine (M2M)

Machine-to-machine (M2M)

இணைக்கப்பட்ட கருவிகளுடனான தொடர்பு 2024இல் 5 பில்லியனில் ஆரம்பித்து 27 பில்லியன் வரை போகும். இதில் சீனா 21% பங்கையும் அமெரிக்கா 20% பங்கையும் எடுத்து கொள்ளும்.

Connected kitchen

Connected kitchen

இணைக்கப்பட்ட சமையலறை உபயோகம் மிகுந்த உதவிகளை புரியும். இதனால் வருடத்திற்கு 15% உணவும் உணவு சார்ந்த பொருட்களுக்குமான தொழில் உயரும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Laws of Internet of Things busted Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X