புதிய டொமைன் பெயரின் கீழ் மீண்டும் - கிக்காஸ் டோரண்ட்ஸ்.!

ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் அதன் உண்மையான ஊழியர்களை கொண்டு மீண்டும் கிக்காஸ் டோரண்ட் வலைத்தளம் தொடங்கப்பபட்டுள்ளது.

Written By:

புதிய ஆன்லைன் அறிக்கைகள் பிரபலமான டோரண்ட் வலைத்தளமான கிக்காஸ் டோரண்ட்ஸ் அதன் அசல் ஊழியர்களை கொண்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றன. கிக்காஸ் டோரண்ட்ஸ்-ன் நிறுவனரான ஆர்ட்டே வாவ்லின் போலந்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வலைதளத்தின் டொமைன் பெயர் அமெரிக்க நீதித்துறையால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வெளியாகியுள்ள டோரண்ட்ப்ரீக் அறிக்கையின்படி, கிக்காஸ்டோரண்ட்ஸ்-ல் பணிபுரிந்த அசல் ஊழியர்கள் செயலிழந்த வலைத்தளத்திற்கு மீண்டும் ஒரு புதிய டொமைன் பெயர் கீழ் உயிர் அளித்துள்ளனர், கிக்காஸ் டோரண்ட்ஸ் ஆனது அதன் பழைய உள்ளடக்கம் மற்றும் முன்னாள் பெருமையுடன் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

க்ளோன் வலைத்தளங்கள்

ஆர்ட்டே வாவ்லின் போலந்தில் கைது செய்யப்பட்ட பின்பு கூட முக்கிய இணையதளமான கிக்காஸ் டோரண்ட்ஸ்-ன் முடக்கப்பட்டு செயல்படாமல் போனாலும், அவ்வலைத்தளத்தின் க்ளோன் வலைத்தளங்கள் இணையத்தில் இருக்கின்றன. ஆனால், அவைகள் கிக்காஸ் டோரண்ட்ஸ்-ன் வெறும் நிழல்கள் போலத்தான் செயல்பட்டன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய சமூகம்

மெயின் வெப்சைட் மூடப்பட்ட பிறகு, கிக்காஸ் டோரண்ட்ஸ்-ன் குழுவினர் ஒரு புதிய சமூகம் உருவாக்கும் முயற்சியாக, எதிர்கால தேதியில் மறுபிரவேசம் எடுக்கும் முனைப்புடன் katcr.co என்ற வலைத்தளத்தை தொடங்கினர்.

முழு செயல்பாடு

இப்போது அந்த வருங்கால வலைத்தள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தோன்றுகிறது. Katcr.co வலைத்தளம் - இப்போது திருட்டு உள்ளடக்கம் கொண்டு பழைய அசல் வலைத்தளத்தை போன்றே ஒரு முழு செயல்பாட்டு இணையதளமாக உருவாகியுள்ளது.

டிஎம்சிஏ டேக்டவுன் நடைமுறை

இந்த புதிய வலைத்தள ஊழியர்கள் "யூட்யூப் சேவை ;போன்று அவர்களின் தளத்தில் சரியான 'டிஎம்சிஏ (DMCA)டேக்டவுன் நடைமுறை' உள்ளது சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது அவர்கள் தங்கள் சொந்த சேவையகங்களில் எந்த பதிப்புரிமை பொருளையும் சேமிபதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

புதிய கிக்காஸ் டோரண்ட்ஸ்

"பெரிய அளவிலான கனரக ஆன்லைன் போக்குவரத்து ஏற்பட்டுள்ள காரணத்தினால் நங்கள் இணையதளத்தை திறக்க முடியாமல் போயிருக்கிறது" என்றும் புதிய கிக்காஸ் டோரண்ட்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

186-வது இடம்

கிக்காஸ் வலைதளத்தின் பணிநிறுத்தம் நேரத்தில் வலைத்தள போக்குவரத்து பகுப்பாய்வு வலைத்தளமான அலெக்சா-வின் படி உலக வலைத்தள தரவரிசையில் கிக்காஸ் டோரண்ட்ஸ் 186-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Kickass Torrents comes back to life, run by original staff members. Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்