கூகுள் ப்ளே ஸ்டோரில் கத்தி ஆப் வந்துவிட்டது நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா

Written By:

நடிகர் விஜய், சமந்தா நடிப்பில் உரபவாகியிருக்கும் கத்தி திரைப்படத்தின் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை ஏற்கனவே வெளியாகியிருப்பதோடு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. தமிழகத்தில் இப்படத்திற்கு எதிர்ப்புகள் இருப்பதோடு இப்படம் தாபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் காமெடி படங்கள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் கத்தி கேம் வெளியானது

கத்தி ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் கேம். இந்த கேமில் கற்பனையாக நீங்க இளையதளபதி விஜயாக விளையாட முடியும். இந்த விளையாட்டில் நீங்க கத்தி படத்தின் கதாநாயகியான சமந்தாவை எதிரிகளிடம் காப்பாற்ற வேண்டும், இது தான் கத்தி கேமின் கரு.

இந்த விளையாட்டில் எதிரிகளை அழிக்க நீங்க செல்ல வேண்டிய இடங்களுக்கு பைக் ரேஸ் நடத்தப்படும் அதில் குறிப்பிட்ட இடத்தை சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். மேலும் இதில் மூன்று நிலைகள் இருக்கின்றது. இது இளைய தளபதி விஜயின் முதல் முப்பரிமான தோற்றத்தில் தெரிவார்.

வெளியாகி நாட்களே ஆகியிருக்கும் விஜயின் கத்தி விளையாட்டிற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு ஆன்டிராய்டு பயனாளிகள் பலரும் இந்த விளையாட்டை அதிகளவில் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Kaththi Official 3D Game for Android. A new game for Actor Vijay has been released under his upcoming movie Kaththi.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்