21 மொழிகளை சப்போர்ட் செய்யும் புதிய கார்பன் ஸ்மார்ட்போன் ரூ.5,450 தான்

Written By:

கார்பன் நிறுவனம் டைட்டானியம் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய கார்பன் டைட்டானியம் டாஸில் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,490 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

21 மொழிகளை சப்போர்ட் செய்யும் புதிய கார்பன் ஸ்மார்ட்போன் ரூ.5,450 தான்

மற்ற விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை போல் கார்பன் நிறுவனமும் 5 இன்ச் FWVGA ஸ்கிரீன் கொடுத்துள்ளது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

இந்த ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டு 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொண்டுள்ளது.

21 மொழிகளை சப்போர்ட் செய்யும் புதிய கார்பன் ஸ்மார்ட்போன் ரூ.5,450 தான்

சமீபத்தில் வெளியான லாவா ஐரிஸ் 465 போன்று இந்த ஸ்மார்ட்போனும் 21 மொழிகளை சப்போர்ட் செய்கின்றது. டைட்டானியம் டாஸில் ஜெஸ்ட்யூர் கொண்ட ஸ்வைப் மற்றும் ஸ்மார்ட் ஐ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்வைப் மூலம் அடுத்த பாடலை ஸ்கிரீனை தொடாமல் ஸ்கிரீனின் மேல் புறமாக ஸ்வைப் செய்தால் போதுமானது. ஸ்மார்ட் ஐ போனில் வீடியோ பார்க்கும் போது ஸ்கிரீனை பார்க்காமல் இருந்தால் வீடியோ தானாக நின்று விடும்.

21 மொழிகளை சப்போர்ட் செய்யும் புதிய கார்பன் ஸ்மார்ட்போன் ரூ.5,450 தான்

கனக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வைபை, ஹாட்ஸ்பாட் மற்றும் ப்ளூடூத் 4.0 கொண்டிருப்பதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. 1850 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் கொண்டிருப்பதோடு கோல்டன் வைட் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Karbonn Titanium Dazzle budget smartphone launched for Rs 5,450. Karbonn expands its Titanium lineup with a new budget smartphone dubbed Dazzle. The all-new Titanium Dazzle is priced at Rs 5,490.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்