கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் கருவி வெளியானது..

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான கார்பன் பட்ஜெட் விலையில் புதிய கருவியை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான கார்பன் கருவிகளின் பட்ஜெட் ரகத்தில் மற்றொரு மாடலினை அந்நிறுவனம் ரூ.5,999க்கு வெளியிட்டுள்ளது.

புதிய கார்பன் மேக்ஃபை ஸ்மார்ட்போன் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும் என்றும் சில்வர், ஷேம்பெயின் மற்றும் வைட் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.6000 பட்ஜெட்டில் இந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை பாருங்கள்..

கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் கருவி வெளியானது..

5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் கருவி வெளியானது..

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும், எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் முன்பக்க ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சம் குறைவாக இருக்கும் இடங்களிலும் சிறப்பான செல்பீ எடுக்க முடியும்.

கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் கருவி வெளியானது..

இவைகளோடு ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளமும், டூயல் சிம் ஸ்லாட், 2ஜி, 3ஜி, ப்ளூடூத், வை-பை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டிருப்பதோடு 2200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இன்ஃப்ராரெட் மற்றும் யுனிவர்சல் ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Indian handset maker Karbonn has launched Machfive, a new Android budget smartphone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்