ஜியோ டிவி ஆப்ஸ் : 430 சேனல்களை வழங்கிவருகிறது.!

ஜியோ ஆப்ஸ் பயன்பாடு கடந்த ஆண்டு 301 வது நிலையில் இந்த ஆண்டு 9 வது இடத்திற்க்கு முன்வந்துள்ளது.!

By Prakash
|

ஜியோ டிவி ஆப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஆபஸ் பொறுத்தமட்டில் கூகிள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்தியாவில் இணைய ஊடுருவல் வளர்ந்து வரும் விகிதத்தை பார்த்து நாட்டில் மேலும் பல இணைய வசதி அறிவிப்புகள் பலவற்றை அறிமுகப்படுத்தி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

ஜியோ டிவி ஆப்ஸ் :  430 சேனல்களை வழங்கிவருகிறது.!

ஜியோ ஆப்ஸ் பயன்பாடு கடந்த ஆண்டு 301 வது நிலையில் இந்த ஆண்டு 9 வது இடத்திற்க்கு முன்வந்துள்ளது. இந்த சாதனையை அடைவதில் பேஸ்புக் லைட்டை தோற்கடித்தது ஜியோ. மேலும் ஜியோ டிவி பொறுத்தமட்டில் பயனர்களுக்கு 430 சேனல்களை வழங்கிவருகிறது, இதில் இந்திய மொழிகளும் மற்றும் ஆங்கிலம் போன்ற பல நாட்டு மொழிகளும் சார்ந்த சேனல்கள் இதனுள் அடக்கம்.

ஜியோ டிவி ஆப்ஸ் சிறப்பு பொறுத்தமட்டில் ஒரு வாரம் முன்பு ஒளிபரப்பு ஆன நிகழ்சிகளை மறுபடியும் பார்க்க வசதி செய்துள்ளது ஜியோ ஆப்ஸ்.மேலும் 'கூகுள் பிளே ஸ்டோரில்' உள்ள, பல ஆப்ஸ்களை பின்னுக்குத் தள்ளி, இவை பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

ஜியோ டிவி 2016 செப்டம்பரில் தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் 200 சேனல்கள் இருந்தன. தற்போது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது ஜியோ டிவி. இப்போது அதிக எண்ணிக்கையிலான சேனல்களை வழங்குகிறது.

ஜியோ தொலைக்காட்சியின் வளர்ச்சியானது, அஇந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது ஐடியா மற்றும் வோடபோன் ஆகியவை ஜியோவிற்க்கு மிகுந்த போட்டியாக உள்ளன. ஏர்டெல் பொறுத்தமட்டில் குறைந்தளவு சேனல்களை மட்டும் வழங்கிவருகிறது.

இந்தியாவில் இணைய பயனாளர்கள் இப்போது 355 மில்லியனாக இருக்கிறார்கள் இதற்க்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எனக் கூறப்படுகிறது. ஜியோ மியூசிக் ஆப்' மூலம், 10 மொழிகளில், ஒரு கோடி பாடல்களை கேட்க முடியும். இவற்றை எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு தர இருப்பதால், திரையரங்குக்குப் போவோர் மற்றும் தொலைக்காட்சி பார்ப்போரின் எண்ணிக்கையும் குறையும். இதன்மூலம், போட்டி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, பொழுதுபோக்கு துறைக்கும், ஜியோ சவால் விடும் நிலை உருவாகியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
JIO TV app is now the ninth most downloaded app on Google Play Store in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X