ஜியோ பிராட்பேண்ட் : 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 3 மாதங்களுக்கு இலவசம்.!

ஒரு மாதத்திற்கு 100ஜிபி என்ற நியாயமான பயன்பாட்டு கொள்கையின் (Fair Usage Policy) கீழ் நொடிக்கு 100 மெகாபைட்ஸ் இணைப்பு வேகத்துடன்.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பையில் அதன் டைரக்ட்-டூ-ஹோம் பிராட்பேண்ட் சேவைகளின் பைலட் செயல்முறையை ஏற்கனவே தொடங்கி பரிசோதனை நிகழ்த்தி வருகிற நிலையில் புனேவிலும் அதன் சேவைகள் சோதனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்கிற போதிலும் மும்பையில் சில காலனிகள் மற்றும் கட்டிடங்களில் கம்பிகள் மூலம் இணைப்புகள் பெற்று ஜியோ பிராட்பேண்ட் சேவையை அணுக தயார் நிலை ஏற்ப்படுத்தப் பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது.

ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவையின் பைலட் செயல்முறை என்றால் என்ன.? அதன் பிராட்பேண்ட் திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தகவல்கள் இதோ.!

நவம்பர் மாதம் முதலே

நவம்பர் மாதம் முதலே

மும்பையில் உள்ள இரண்டு ஜியோ பிராண்ட்பேண்ட் பயனர்களின்படி ஜியோ சேவைகளின் சந்தாவை அனுபவித்து வருவதாக கூறியுள்ளனர். இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் முதலே ஜியோ பிராண்ட்பேண்ட் சேவைகளுக்கான இணைப்பு பணிகள் தொடங்கிவிடப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு

மிக நீண்ட நாட்களாக திட்டமிடல் பணிகள் நடைபெற்று வந்துள்ள போதிலும் கூட ரிலையன்ஸ் ஜியோ பிராண்ட் சேவைகள் மிக சமீபத்தில் தான் அதாவது சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தான் குடியிருப்பாளர்களை நெருங்க தொடங்கியுள்ளது.

நொடிக்கு 100 மெகாபைட்ஸ்

நொடிக்கு 100 மெகாபைட்ஸ்

ஜியோவின் மொபைல் சேவைகள் போன்றே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் பிராட்பேண்ட் சேவையிலும் "வெல்கம் ஆஃபர்" வழங்கும் என்பது போல் தெரிகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 100ஜிபி என்ற நியாயமான பயன்பாட்டு கொள்கையின் (Fair Usage Policy) கீழ் நொடிக்கு 100 மெகாபைட்ஸ் இணைப்பு வேகத்துடன் கூடிய மூன்று மாத கால இலவச சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எல்லை

புதிய எல்லை

போட்டியாளர்களின் கவனத்திற்கு இந்தியாவில் எந்தவொரு இணைய சேவை வழங்குநரும் (ஐஎஸ்பி) தராத வேகத்தை ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவை வழங்கும் என்பதால் வாடிக்கையாளர்களின் அனுபவம் புதிய எல்லைகளை தொடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

செக்யூரிட்டி டெபாஸிட்

செக்யூரிட்டி டெபாஸிட்

சுவாரஸ்யமாக, பரிசோதனை ஓட்டம் பெரும்பயனர்களின் வீடுகளுக்கு விஜயம் தந்த முகவர்கள், நிறுவனம் வழங்கும் திட்டங்கள் சார்ந்த எந்த பட்டியலையும் கொடுக்கவில்லை. சுவாரஸ்யமாக, பரிசோதனை ஓட்டம் பெரும்பயனர்களின் வீடுகளுக்கு விஜயம் தந்த முகவர்கள், நிறுவனம் வழங்கும் திட்டங்கள் சார்ந்த எந்த பட்டியலையும் கொடுக்கவில்லை. அவர்கள் ரவுட்டருக்கான செக்யூரிட்டி டெபாஸிட் ஆன ரூ.4000/-ஐ மட்டுமே பெற்றுள்ளனர்.

தினசரி வரம்பு எல்லை

தினசரி வரம்பு எல்லை

உடன் பயனர்கள் தேர்ந்தெடுக்கும் திட்டங்களை பொறுத்து கட்டணங்கள் வேறுபடும் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இதற்கிடையில், சேவையில் எந்த விதமான தினசரி வரம்பு எல்லையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துல்லியமான முறை

துல்லியமான முறை

சரி ஜியோ பிராட்பேண்ட் திட்டங்கள் எப்படி இருக்கும் என்று பார்த்தால் jiocare.net (அதிகாரப்பூர்வமற்ற) என்ற ஒரு வலைத்தளத்தின் மூலம் ரிலையன்ஸ் பிராட்பேண்ட் சேவைகளை பற்றி தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும், நிறுவனத்தின் ஒரு மூல இணையதளம் மூலம் எந்த தகவலும் துல்லியமான முறையில் கிடைக்கவில்லை.

வணிக முறை

வணிக முறை

மேலும் நிச்சயமாக, எந்த ஆச்சரியமும் இன்றி, இப்போதைக்கு இதுவொரு ஒரு பைலட் சோதனை ஓட்டத்தின்கீழ் வழங்கப்படும் பிணையமாகும் என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம். இதன் உண்மையான வணிக முறையானது அதன் 4ஜி சேவைகளை போல விடயங்கள் தெளிவானதும் அறியப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.11/- முதல் ரூ.9,999/- வரை ஜியோ ப்ரைம் கட்டண திட்டங்கள் என்னென்ன.?

Best Mobiles in India

Read more about:
English summary
Jio's upcoming 1Gbps gigabit broadband service. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X