ரூ.500க்கு 600 ஜிபி டேட்டா : ஜியோவின் அடுத்த அதிரடி.!

மொபைல் 4ஜி சேவைகளைத் தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு ஜியோ தயாராகி வருகிறது. பிராட்பேண்ட் சேவைகளில் மிகவும் மலிவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன, விலை என்ன.??

Written By:

ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை அறிமுகம் செய்யும் போதே ஜிகா ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜியோ பிராட்பேண்ட் சேவை சார்ந்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களை விரிவாக இங்குப் பார்ப்போமா.??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மூன்று வகை

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி கோல்டு, சில்வர் மற்றும் பிளாட்டினம் என மூன்று விதங்களில் ஜியோ ஜிகாஃபைபர் வழங்கப்படும். டேட்டா வேகம் மற்றும் டேட்டா அளவுகளுக்கு ஏற்ப வித்தியாச திட்டங்கள் இருக்கின்றன.

மாத கட்டணம்

மாதம் ஒன்றிற்கு ரூ.500/- முதல் திட்டங்கள் துவங்குகின்றன. அதன் படி பயனர்கள் ரூ.500/- செலுத்தி 600 ஜிபி டேட்டாவினை பெற முடியும், அதுவும் நொடிக்கு 15 எம்பி என்ற வேகத்தில்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அன்லிமிட்டெட் திட்டம்

அன்லிமிட்டெட் பிளான் ரூ.800/- முதல் கிடைக்கிறது. இதில் நொடிக்கு 10 எம்பி வரையிலான வேகம் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாள் அன்லிமிட்டெட் பிளான் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதனைப் பயனர்கள் ரூ.400 செலுத்திப் பெற முடியும்.

வேகம் சார்ந்த திட்டங்கள்

வேகம் சார்ந்த மாத திட்டங்கள் நொடிக்கு 50 எம்பி என்ற வேகத்தில் இருந்து துவங்குகின்றன, இதில் பயனர்கள் சுமார் 2000 ஜிபி டேட்டா பெற முடியும். இத்துடன் நொடிக்கு 400 எம்பி என்ற வேகத்தில் சுமார் 300 ஜிபி வரை பெற முடியும்.

அறிமுகம்

தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் ஜியோ ஜிகாஃபைபர் திட்டங்கள் அடுத்த ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்



English summary
Jio plans to offer 100 MBPS internet speeds at just Rs. 500
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்