1000 ரூபாய்க்கு மொபைல்போன் : அதிரடியாய் களமிறங்கும் 'ஜியோ'.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டம்..!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் வழங்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

Written By:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 4ஜி திறன் கொண்ட பீச்சர் போன் கருவிகளை வெளியிட இருக்கிறது. இந்தக் கருவிகள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.1,000 என்றும் கூறப்படுகிறது. இந்தக் கருவிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாய்ஸ் ஓவர் எல்டிஇ (VoLTE) தொழில்நுட்பத்தைச் சார்ந்து தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால்களை வழங்க இருக்கிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அறிமுகம்

இந்தியாவில் 2ஜி பீச்சர் போன்களின் சந்தை மிகவும் பெரியதாக இருக்கும் வேலையில் ரிலையன்ஸ் நிறுவனம் வோல்ட்இ கொண்ட 4ஜி பீச்சர் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவைகிராம பகுதிகளில் அதிகளவு கவனத்தை ஈர்க்கும் என ஜியோ எதிர்பார்க்கின்றது.

பீச்சர் போன் பயனாளிகள்

இந்தியாவின் சுமார் 1 பில்லியன் மொபைல் போன் பயனர்கள் இன்றும் பீச்சர் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொருத்த வரை மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3000/- முதல் துவங்குகின்றது.

வோல்ட்இ

இந்தியாவில் வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு வாய்ஸ் கால்களை வழங்கும் ஒரே நிறுவனமான ஜியோ மூன்றே மாதங்களில் சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஈர்த்திருக்கின்றது. இது சந்தையில் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமான ஏர்டெல்'க்கு நிகரானது ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்மார்ட்போன்

தற்சமயம் வோல்ட்இ தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஜியோ தயாரிக்கும் இரண்டு பீச்சர் போன்கள் ரூ.1000/- மற்றும் ரூ.1,500/- விலைகளில் ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

தொடுதிரை

ரிலையன்ஸ் வெளியிட இருக்கும் பீச்சர் போன்கள் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன்களைப் போன்றே இயங்கும், ஆனால் இவற்றில் தொடுதிரை எனப்படும் டச் ஸ்கிரீன் மட்டும் இருக்காது.

வெற்றி

'பெரும்பாலானோர் மிகக் குறைந்த விலையில் இலவச அழைப்புகளை வழங்கும் கருவிகளை வாங்கக் விரும்பும் பட்சத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்கள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.' எனச் சந்தை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம்

புதிய பீச்சர் போன்களைத் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனம் லாவா மற்றும் சீனாவின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பணியாற்றி வருகின்றது. 4ஜி பீச்சர் போன்களின் விலை ரூ.1000/- என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் இவற்றை தயாரிக்கும் செலவு கருவி ஒன்றிற்கு ரூ.2500/- வரை ஆகும்.

விற்பனை

முழுமையாகத் தயாரிக்கப்பட்டதும் ஜியோ மற்றும் லாவா பிரான்டிங் மூலம் இவை சந்தையில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜியோவுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து பணியாற்ற லாவா திட்டமிட்டு வருவதாக லாவா நிறுவனத்தின் ஹரி ஓம் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Jio to launch phones with unlimited voice, video calling at Rs 1,000
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்