ஜியோ 5ஜி : ரிலையன்ஸின் வியாபாரமும், ராஜ தந்திரமும்..!

|

இந்திய 4ஜி இணைய சந்தையில், ரிலையன்ஸ் ஒரு புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் என்று கேட்டதால், அதற்கு பதில் - கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ரிலையன்ஸின் இந்த முயற்சி தான் உலகிலேயே பெரிய அளவிலான டிஜிட்டல் மய முயற்சியாகும் மற்றும் நாள் ஒன்றில் இருந்தே 70% மக்களை சென்றடைய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

பிற ஆப்ரேட்டர்களை கலக்கத்தில் மூழ்கடித்த ரிலையன்ஸ்க்கு ஜியோ திட்டம் மட்டுமே துணை அல்ல, இந்திய இணைய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் ரிலையன்ஸ்க்கு பிற ஆப்ரேட்டர்களுக்கு இல்லாத பல துணைகள் உண்டு, அதில் பல வியாபார யுக்திகளும், ராஜ தந்திரங்களும் உண்டு..!

மிகப்பெரிய :

மிகப்பெரிய :

ரிலையன்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய ஒளியிழை நெட்வொர்க் (fiber optic network) கொண்டது.

உயர் தரம் :

உயர் தரம் :

மொத்தம், 250,000-க்கும் அதிகமான கிமீ நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல்-நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் நிறுவியுள்ளது.

இணைய அணுகல் :

இணைய அணுகல் :

அதில் 288 கேபிள்களை ஜியோ பயன்படுத்திக் கொள்கிறது, அதிக இழைகள் என்றால் அதிக அலைக்கற்றை மற்றும் அதிவேக இணைய அணுகல் என்று அர்த்தம்.

ஒப்பந்தம் :

ஒப்பந்தம் :

பெரும்பாலான மற்ற நிறுவனங்களிடம், ரிலையன்ஸ் அளவிலான பைபர் நெட்வொர்க்குகளில் சொந்தமாக கிடையாது. ஒப்பந்தம் மூலமே பிற பைபர் நெட்வெர்க்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குகின்றன.

ஜியோ 4ஜி :

ஜியோ 4ஜி :

ஆனால் ஜியோ 4ஜிக்கு அந்த அவசியமே கிடையாது. ஜியோ அதன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கேபிள்களை அணுகிக் கொள்ளும்.

பெரிய வை-பை :

பெரிய வை-பை :

முதலில் மொபைல் டவர்கள் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். மொபைல் கோபுரங்கள் ஒரு பெரிய அளவிலான வை-பை போன்றது.

இணைய சேவை :

இணைய சேவை :

உங்கள் வீட்டில் வைஃபை கருவியானது உங்களுக்கு இணைய சேவையை வழங்குவது போலத்தான் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு பெரிய ஐஎஸ்பி-களாக திகழும் மொபைல் கோபுரங்கள் மூலம் இணைய சேவையை வழங்குகிறது.

வயர்லெஸ் :

வயர்லெஸ் :

அப்படியாக நீங்கள் 3ஜி அல்லது 4ஜி பயன்படுத்தும் போது ஒரு வயர்லெஸ் வழிமுறையில் நீங்கள் உங்களுக்கான மொபைல் டவர்களை தொடர்பு கொள்கிறீர்கள், டேட்டா கோபுரத்தை அடைந்ததும், அதன் முழு டேட்டாவும் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் அனுப்பப்படும்.

சங்கடம் :

சங்கடம் :

இப்படியாகத்தான் வேகமான 4ஜி சேவையை வழங்க ஃபைபர் பிணைய கேபிள்கள் மிக அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது, இந்த விடயத்தில் பிற சேவை வழங்குநர்கள் ஒரு பெரிய சங்கடமான சூழலில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

2ஜி மற்றும் 3ஜி :

2ஜி மற்றும் 3ஜி :

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கோ பழைய 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை கொண்டுள்ளது இப்பொது அவைகளை 4ஜி சேவைக்காக மேம்படுத்தினால் மட்டுமே போதும்.

ஒரே கவலை :

ஒரே கவலை :

கடந்த முறை 3ஜிக்காக டவர்கள் மேம்படுத்தப்பட்ட போது அவர்கள் எதிர்பார்த்த 3ஜி வருமானம் உருவாக்கப்படவில்லை, முதலீடுகளில் பல்லாயிரம் கோடி இழந்தது, ஆக இம்முறை நல்ல உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரே கவலை.

ஜியோ :

ஜியோ :

மறுபக்கம் ரிலையன்ஸ் நிறுவன வியாபாரத்தின் தொலைநோக்கு பார்வையையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது இந்த ஜியோ திட்டமானது வெறும் 4ஜி சேவைக்கானது மட்டுமல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

5ஜி  :

5ஜி :

ஜியோவிற்கு அடுத்தது 5ஜி தான் வெளிவரும், அடுத்த கட்டம் 5ஜி தான் என்பது நன்றாக தெரியும். அதனால் ரிலையன்ஸ் நிறுவன ஒளியிழை பிணையமானது 4ஜி உடன் சேர்த்து வருங்கால 5ஜிக்கு அப்கிரேட்'தனிற்கு ஏற்றது போல தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.

Best Mobiles in India

English summary
Jio knows that 5G will come soon and Reliance Jio 4G will revolutionize the market. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X