சத்தமில்லாது சாதிக்கும் இஸ்ரோ : கூடிக்கொண்டே போகும் கூட்டணி..!

Written By:

இஸ்ரோ - தனது ஒவ்வொரு அசைவிலும் சூப்பர் பவர் நாடுகளை வாய்பிளக்க வைக்கும் இந்தியாவின் பெருமையாகும். இந்தியர்களின் அறிவும் செயல்திறனும் முழுக்க முழுக்க முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை சார்ந்து இருக்கும் என்பதற்கான வலுவான ஆதராம்..!

அதற்கு சமீபத்திலேயே பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. அவைகளில், இந்தியாவிற்கான சொந்த ஜிபிஎஸ், உலக நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதில் மைல்கல், உள்நாட்டு உற்பத்தியில் மாபெரும் வளர்ச்சி, ஆதித்யா எல்1, சந்திராயன் - 2, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுடன் இணைந்து மார்ஸ் மிஷன், போன்றவைகள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது, விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளியில் பயன்படுத்துவதில் புரிந்துணர்வு ஆகியவைகளின் கீழ் 37 நாடுகளுடன் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

#2

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது எந்தெந்த துறையின் கீழ் எந்தெந்த ஆய்வுகள் நடத்தப்பட இருக்கின்றன என்பது பற்றியும் விவரிக்கப்பட்டது.

#3

செயற்கைகோள் பயணங்களில் கூட்டு புரிதல்கள், பூமி மற்றும் பிரபஞ்சதத்தை கண்காணிக்க மேம்பட்ட அறிவியல் வளர்ச்சி, கூட்டாக அளவீடு மற்றும் சரிபார்த்தல் சோதனைகள் நடத்தும் திட்டம் ஆகிய ஒப்பந்தங்கள் உண்டாகியுள்ளன.

#4

அத்துடன், மேம்பட்ட தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் பணிக்கான விண்வெளி ஊடுருவல் மற்றும் தொடர்பு ஆதரவு, பூமி மற்றும் பிரபஞ்சந்தை ஆராயும் நோக்கம் கொண்ட விண்கலம் உருவாக்குவதில் கட்டமைப்பதில் முன்னேற்றம் ஆகிய ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

#5

மேலும் இஸ்ரோவுடன் ரிமோட் சென்சிங் (Remote Sensing) துறை சார்ந்த சில ஒப்பந்தங்களை உலக நாடுகள் நிகழ்த்தியுள்ளன.

#6

அவைகளில், இயற்கை வள மேலாண்மை, தாவர உயிர்த்திரள் கணிப்பு, வளிமண்டலவியல் மற்றும் கடலியல் பயன்பாடுகள், வளிமண்டல அளவுரு திரும்ப பெறுதல் மற்றும் மாடலிங், காலநிலை கண்காணிப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை ஆதரவு போன்றவைகள் முதன்மையானவைகள் ஆகும்

#7

அர்ஜென்டீனா , ஆஸ்திரேலியா, பிரேசில், புருனே டருஸ்ஸலாம் , பல்கேரியா , கனடா, சிலி , சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி , இந்தோனேஷியா, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான் , குவைத் , மொரிஷியஸ் , மெக்ஸிக்கோ, மங்கோலியா.

#8

மியான்மர் , நார்வே , பெரு, குடியரசு கொரியா , ரஷியன் கூட்டமைப்பு, சவுதி அரேபியா , ஸ்பெயின், ஸ்வீடன் , சிரியா, தாய்லாந்து , நெதர்லாந்து , உக்ரைன் , ஐக்கிய ராஜ்யம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , அமெரிக்கா மற்றும் வெனிசுலா

#10

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
ISRO Signs MoU with 37 countries for exploration and use of outer space. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்