மார்ஸ் மிஷன் 2 : தெறிக்கத் தயாராகும் இஸ்ரோ!

|

மங்கள்யான் - இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மணி மகுடங்களில் ஒன்று. அது மட்டுமல்ல வெறும் பதினைந்தே மாதங்களில் உருவாக்கம் பெற்றது, இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள மார்ஸ் மிஷன்களிலேயே மிகவும் மலிவான விலையில் சாத்தியமான மிஷன், எந்த நாடும் முதல் முயற்சியிலேயே ஒரு வெற்றிகரமான செவ்வாய் கிரக பயணத்தை அடைந்ததில்லை, ஆனால் இந்தியாவின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றியில் - முடிந்து - தொடர்கிறது.

இந்தியாவை 'கேலிப்பேச்சு' பேசிய உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்களை திகைக்க வைத்த இஸ்ரோ, மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை வாய்பிளக்க வைக்க தயாராகி விட்டது. ஆம், தயாராகிறது இஸ்ரோவின் - மார்ஸ் மிஷன் - 2..!

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் :

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் :

உலக சாதனை படைத்த மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (Mars Orbital Mission - MOM) எனப்படும் மங்கள்யான், விண்வெளிக்குள் செலுத்தப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது.

அழைப்பு :

அழைப்பு :

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கிரக விஞ்ஞானிகளுக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

பரிந்துரை :

பரிந்துரை :

அதாவது எம்மாதிரியான செவ்வாய் கிரக ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை மார்ஸ் ஆர்பிட்டல் மிஷன் -2 விற்கான கருவிகளுடன் பரிந்துரைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

உறுதி :

உறுதி :

இந்த சமீபத்திய அறிவிப்பில் இருந்து இந்தியாவின் இரண்டாவது மார்டியன் தயாராக இருக்கிறது என்ற துணிகர செய்தி உறுதியாகியுள்ளது.

கிரக விஞ்ஞானிகள் :

கிரக விஞ்ஞானிகள் :

பரிந்துரைக்க கேட்டுக்கொள்ளப்பட்ட, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கிரக விஞ்ஞானிகள் செப்டம்பர் 6 தங்கள் திட்டங்களை இஸ்ரோவிடம் வழங்க உள்ளனர்.

தேதி மற்றும் விவரங்கள் :

தேதி மற்றும் விவரங்கள் :

மார்ஸ் மிஷன் - 2 பற்றிய அதிகாரப் பூர்வமான தேதி மற்றும் விவரங்கள் விஞ்ஞானிகளிடம் இருந்து கிடைக்கப் பெற இருக்கும் திட்டங்களை பொறுத்தே வெளியாகும் என்று இஸ்ரோவின் பெயர் குறிப்பிட விரும்பாத வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் :

பட்ஜெட் :

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2017 பட்ஜெட்டிற்கு முன்பாக மார்ஸ் மிஷன் - 2 மொத்த பணியின் செலவு மதிப்பீட்டை சமர்ப்பிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் :

பட்ஜெட் :

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2017 பட்ஜெட்டிற்கு முன்பாக மார்ஸ் மிஷன் - 2 மொத்த பணியின் செலவு மதிப்பீட்டை சமர்ப்பிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கியமான நோக்கம் :

முக்கியமான நோக்கம் :

பேலோட் (விண்கலங்கள்) மற்றும் சோதனைகள் தான் இரண்டாவது மார்ஸ் மிஷனின் முக்கியமான நோக்கமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

26 மாதங்களுக்கு ஒருமுறை :

26 மாதங்களுக்கு ஒருமுறை :

தொடர்ந்து சூரியனை சுற்றி நகர்வதால் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் நிலைகளின் அடிப்படையில் 26 மாதங்களுக்கு ஒருமுறை செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்ப சிறப்பான வாய்ப்பு அமையும்.

நவம்பர் 2013 :

நவம்பர் 2013 :

அதனை அடிப்படையாக வைத்து தான் நவம்பர் 2013-ல் இந்தியா மற்றும் அமெரிக்கா அந்தந்த செவ்வாய் பயணங்களை மேற்கொண்டது.

மார்ச் 2018 :

மார்ச் 2018 :

அதனை தொடர்ந்த அடுத்த இரண்டு வாய்ப்புகள் ஆனது ஜனவரி 2016 (இது மிகவும் உகந்த நிலையாக கருதப்படவில்லை )மற்றும் மார்ச் 2018 திகழ்கிறது.

ஒற்றுமை :

ஒற்றுமை :

செவ்வாய் கிரகமானது பூமி கிரகத்தோடு வளிமண்டலம், நிலம் மற்றும் கனிமங்கள் போன்ற விடயங்களில் ஒற்றுமை கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர் அதனாலேயே தான் மார்ஸ் மிஷன் - 2 தயாராகிறது.

கேள்விகளுக்கு விடை :

கேள்விகளுக்கு விடை :

இந்த ஆய்வில் கிரகங்கள் எப்படி உருவானது சூரியமண்டலத்தில் வேறெங்கும் உயிர் ஆதாரம் இருக்கிறதா, ஒருவேளை செவ்வாய் அடுத்த பூமியாக மாறுமா.? போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.

முக்கிய பணி :

முக்கிய பணி :

நாம் இன்னும் செவ்வாய் பற்றிய பல விஷயங்களை அறிந்துகொள்ளவில்லை, பல சிக்கலான செவ்வாய் கிரக ஆய்வுகளுக்கு மத்தியில் மங்கள்யானின் முக்கிய பணியான மீத்தேன் ஆய்வு மற்றும் இன்னும் முக்கியமான மார்ஸ் தூசி மற்றும் அதன் மண்டிலம் பற்றிய ஆய்வுக்ளும் முக்கியமான ஆய்வுகள் தான்.

பொறியியல் சாதனை :

பொறியியல் சாதனை :

மங்கள்யான் ஒரு பெரிய பொறியியல் சாதனையாகும். சிவப்பு கிரகத்தை அடைந்து பல மில்லியன் கிலோமீட்டர் இடைவெளியில் செவ்வாய் கிரகத்தின் நல்ல புகைப்படங்களை அனுப்பி வைத்து கொண்டிருக்கிறது.

ரஷ்யா , அமெரிக்கா :

ரஷ்யா , அமெரிக்கா :

மங்கள்யான் - முதல் முயற்சியிலேயே செவ்வாயை அடைந்தது என்பதும் எந்த நாடும் முதல் முயற்சியிலேயே வெற்றி அடையவில்லை ரஷ்யா , அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட, என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்பாதை  :

சுற்றுப்பாதை :

மார்ஸ் மிஷன் 2 விண்கலமானது சுமார் 200 கி.மீ. X 2,000 கி.மீ. கொண்ட ஒரு சுற்றுப்பாதை கொண்டிருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெரிய ஜி.எஸ்.எல்.வி :

பெரிய ஜி.எஸ்.எல்.வி :

கடந்த முறை எடை குறைவான பிஎஸ்எல்வி மூலம் நிகழ்த்தப்பட்டது இந்த முறை கூர்மையான நல்ல சோதனை நிகழ்த்தப்படும் நோக்கத்தில் மார்ஸ் மிஷன் 2'வானது பெரிய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்வெளிக்குள் செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கச் :

மேலும் படிக்கச் :

'பென்னு' : பூமியோடு மோதல் நிகழ்த்த 0.037% வாய்ப்பு உள்ளது..!


மார்க் எங்கு அமர்ந்து வேலை செய்கிறார் என்பது உங்களை ஆச்சரியப்படுத்தும்..!


1956-ல் 36000 அடி உயரத்தில் நிகழ்ந்த மர்மம், என்ன அது..?!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ISRO sets the ball rolling for Mars Mission-2. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X