அசத்தும் இஸ்ரோ : ஒரே கல்லுல 21 மாங்காய்...!

|

ஒருவரின் வளர்ச்சியானதை யாராலும் தடுக்கவே முடியாது அதிலும் நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் வளர்ச்சியை - பல காலமாக, பல உலக நாடுகளின் விண்வெளி மையங்களால் - அசைக்ககூட முடியவில்லை என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவைகளில், உலக நாட்டு செயற்கை கோள்களை விண்ணியல் செலுத்துவதில் மைல்கல், உள்நாட்டு உற்பத்தியில் மாபெரும் வளர்ச்சி, ஆதித்யா எல்1, சந்திராயன் - 2, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுடன் இணைந்து மார்ஸ் மிஷன் போன்றவைகள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும்.

அந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, வரும் மே மாத இறுதியில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த அணிவகுத்து நிற்கிறது..!

சாதனை :

சாதனை :

இஸ்ரோவானது ஒரே பாய்ச்சலில் சுமார் 21 சிறிய வகை வணிக செயற்கைகோள்களை ( commercial satellites) விண்ணில் செலுத்தும் மாபெரும் சாதனையை நிகழ்த்த இருக்கிறது.

வணிக செயற்கைகோள்கள் :

வணிக செயற்கைகோள்கள் :

விண்ணில் செலுத்துப்பட இருக்கும் 21 செயற்கைகோள்களில் பெரும்பாலும் வெளிநாட்டு வணிக செயற்கைகோள்கள் ஆகும். மேலும் ஒரு பெரிய இந்திய விண்கலம் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

பி.எஸ்.எல்.வி சி33 :

பி.எஸ்.எல்.வி சி33 :

பூமி கிரகம் சார்ந்த ஆய்விற்காக வடிவமைக்கப்பட்டுள்ள, சுமார் 700 கிலோகிராம் எடை கொண்ட இந்திய விண்கலம் தான் கார்ட்டோசாட்-2சி (Cartosat-2C),
முதன்மை லான்சர் ஆன பி.எஸ்.எல்.வி சி33 (PSLV C33) மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

ரெசெல்யூஷன் :

ரெசெல்யூஷன் :

கார்ட்டோசாட் 2சி-ன் 60 சென்டிமீட்டர் (60 cm) அளவிலான ரெசெல்யூஷன் கொண்டுள்ளதால் விண்வெளியில் இந்தியாவின் சிறந்த கண்காணிப்புகளில் ஒன்றாக இது திகழும் என்பதில் சந்தேகமேயில்லை.

600 கிலோமீட்டர் :

600 கிலோமீட்டர் :

மேலும் கார்ட்டோசாட்-2சி ஆனது நாட்டின் இராணுவ தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நோக்கமும் கொண்டுள்ளது. கார்ட்டோசாட்-2சி-ன் கேமிரா ஆனது அதன்
சுற்றுப்பாதையில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் வரையிலாக பொருட்களை கண்டறியும் திறன் கொண்டது.

ஒத்துழைப்பு :

ஒத்துழைப்பு :

ஒரே சமயத்தில் பல செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும்போது ராக்கெட் மற்றும் விண்கலம், ஆப்ரேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட ஒவ்வொரு செயற்கைகோள் ஆகியவைகளுக்கு இடையே பலவகையான ஒத்துழைப்பு தேவை.

ரீலீஸ் டைம் :

ரீலீஸ் டைம் :

ஆகையால் இதுபோன்ற ஏவுதலில் பிற வாடிக்கையாளர்களின் செயற்கைகோள்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் கவனமாக மற்றும் துல்லியமான ரீலீஸ் டைம் அவசியம் என்கிறார் இஸ்ரோவின் தலைவர் ஏ. எஸ். கிரண்குமார்.

1 கிலோகிராம் முதல் :

1 கிலோகிராம் முதல் :

ஏவப்படும் சிறிய வகை செயற்கை கோள்கள் ஆனது சுமார் 1 கிலோ கிராம் முதல் 130 கிலோ கிராம் எடை வரையிலாக இருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரிதான சேவை :

அரிதான சேவை :

மேலும், ஒரே பி.எஸ்.எல்.வி-யில் பல சிறிய செயற்கைகோள்களை உள்ளடக்கி விண்ணில் ஏவுவது உலகளவில் மிகவும் அரிதான சேவையாகும் என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி :

வெற்றி :

இதுவரையிலாக இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-யின் மூலம் கடந்த 2008 ஆம் ஆண்டு 10 விண்கலங்களோடு 8 சிறிய வகை வெளிநாட்டு செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

கார்ட்டோசாட்-2ஏ :

கார்ட்டோசாட்-2ஏ :

பின்பு நிலப்பகுதிகளை புகைப்படம் எடுத்து அனுப்பும் அளவிலான 80 சென்டிமீட்டர் ரெசெல்யூஷன் கொண்ட இந்திய விண்கலமான கார்ட்டோசாட்-2ஏ (Cartosat-2A) விண்ணில் செலுத்தப்பட்டது.

சிங்கப்பூர் :

சிங்கப்பூர் :

பின்பு கடந்த டிசம்பர் மாதம் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ஒரே பாய்ச்சலில் 6 சிங்கப்பூர் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை புரிந்தது.

நாசா :

நாசா :

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, தனது மைனோடர் லான்சர் ( Minotaur launcher) மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு வரையிலாக சுமார் 29 வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

விண்வெளியில் 'நீடிக்கும்' டாப் 10 விசித்திரங்கள்..!


உலகம், இந்தியர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ISRO to launch 21 satellites in one shot. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X