எலான் மஸ்கிற்கு இஸ்ரோவின் சவால்..!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ ஒரு சகாப்தம் என்றால், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக நிர்வகிக்கும் எலான் மஸ்க், மற்றும் அவரின் நிறுவனமும் ஒரு தனிச் சகாப்தமாகும்..!

இந்த இரண்டு சகாப்தங்களும் தற்போது திறன் சார்ந்த ஒரு விடயத்திற்காக ஒரே களத்தில் சந்திக்க இருக்கிறது. அதாவது, இஸ்ரோ தனது சாதனை செயற்கைக்கோள் ஏவலோடு சேர்த்து எலான் மஸ்கிற்குச் சவால் ஒன்றையும் சேர்த்தே விடுக்கிறது..!

#1

#1

அடுத்த வாரம் இந்தியாவின் மிகப்பெரிய 'சிங்கிள் லான்ச்'தனை நிகழ்த்த இருக்கிறது இஸ்ரோ, ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

#2

#2

இந்த சாதனை ஏவலின் மூலம் ஒரு உலகளாவிய கட்டுமான மற்றும் திறன் நிரூபனம் சார்ந்த முயற்சியையும் சேர்த்தே நிகழ்த்த இருக்கிறது இஸ்ரோ, முக்கியமாக வணிக விண்வெளி விமான கட்டுமான நிறுவனங்களோடு..!

#3

#3

அப்படி பார்க்கும் போது பில்லியனர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்குதான் இஸ்ரோ சவால் விடுக்கிறது என்றே வெளிப்படையாக கூறலாம்.

#4

#4

செலுத்தப்பட இருக்கும் செயற்கைகோள்களின் பெரும்பாலான இயந்திரங்கள் பூமியின் வளிமண்டலத்தை அளவிடவும், கண்காணிக்கவும் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் ஆரம்பகால ரேடியோ ஆபரேட்டர்கள் சேவையை வழங்கவும் இருக்கிறது.

#5

#5

தொலைபேசி நிறுவனங்கள், இணைய சேவை வழங்குநர்கள், விமான நிறுவனங்கள், தொடர்பு அலைவரிசைக்காக கார் தயாரிப்பாளர்கள் உட்பட பல வணிக ரீதியான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

#6

#6

இதுபோன்ற வணிக ரீதியான செயற்கைகோள் ஏவல்களை, ரீயுசபில் ராக்கெட் போன்று பல செலவுகளை குறைக்கும் முறைகளில் நிகழ்த்த எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர்களின் அரசாங்கம் சார்த்த நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

#7

#7

தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பாரம்பரியமாக குறைந்த செலவிலேயே கட்டுமானம் தொடங்கி 'லான்ச்' வரை நிகழ்த்தும் இந்தியாவின் இஸ்ரோ தற்போது சந்தையில் ஒரு போட்டியாளராய் நிமிர்ந்து நிற்கிறது.

#8

#8

"திறன்மிக்க அதே சமயம் குறைந்த செலவில், உடன் எதிர்காலத்தை மனதிற்க்கொண்டு பிற போட்டியாளர்களுக்கு இணையாக செயல்படவில்லை என்றால் நாம் ஒரு பொருத்தமற்ற ஓட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று அர்த்தம், எனவே சில அச்சுறுத்தல்கள் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" - என்று கூறியுள்ளார், இஸ்ரோ தலைவர் ஏ.எஸ் கிரண் குமார்.

#9

#9

2014-ஆம் ஆண்டு ஒரே லான்ச்சில் 33 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய ரஷ்யா, 29 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய நாசாவிற்கு அடுத்து நிகழ்த்தப்படும் மிகப் பெரிய சிங்கிள் லான்ச் இஸ்ரோவினுடையது தான்..!

#10

#10

2014-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 208 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன, அதாவது ஒவ்வொரு ஆண்டை விடவும் இரண்டு மடங்கு அதிகமான செயற்கைகோள்கள்.

#11

#11

குறிப்பாக, தங்கள் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக தொலைபேசி சேவைகளை கொண்டுவர முயற்சித்த நாடுகளான இந்தியா மற்றும் இந்தோனேஷியாவிற்கு அதில் அதிக பங்குண்டு.

#12

#12

இதனால் தான், ஸ்மார்ட்போன் சந்தை சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது, அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 30 சதவிகிதம் வரையிலாக உயரவும் இருக்கிறது.

#13

#13

இதுவரையிலாக ஒளிபரப்பு, ஊடுருவல், அறிவியல் ஆய்வு மற்றும் வானிலை கண்காணிப்பு என மொத்தம் 35 இந்திய செயற்கைகோள்கள் சுற்றுவட்டப்பாதையில் உள்ளன, இருந்தும் இன்னும் இரண்டு மடங்கு அதிக செயற்கை கோள்கள் தேவைபப்டும் நிலையில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#14

#14

ஆகையால், அதிக அளவிலான லான்ச்களை நிகழ்த்த அதிக அளவிலான செயற்கைகோள்களை உருவாக்கவும், மாதத்திற்கு ஒரு லான்ச் நிகழ்த்தும் நிலையை அடையவும் இஸ்ரோ தீவிரமாக பணிபுரிந்து கொண்டிருக்கிறது, அப்போது தான் பின்தள்ளப்படாமல் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர்களின் நிறுவனங்களோடு போட்டி நிலையில் இருக்க முடியும்..!

#15

#15

ஏன் பூமியை விட்டு நாம் வெளியேற வேண்டும்..? - எலான் மஸ்க் அதிரடி..!


துரோகம் : கண்டுபிடித்ததெல்லாம் பெண்கள், பெயரும் புகழும் வாங்கியதோ ஆண்கள்..!


காலவெளியில் உள்ள சுரங்கப்பாதை : நம்மை எங்கு கொண்டு செல்லும்..?!

#16

#16

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Isro challenges Elon Musk with record satellite launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X