பழைய நிலைக்கு மீண்டு எழுமா நோக்கியா.??

Written By:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நம்மவர்கள் கையில் நோக்கியா அல்லது அலுவலகம் செல்வோர் கையில் பிளாக்பெரி போன்ற கருவிகள் சகஜமாகக் காணப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் உலகம் முழுக்க விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 70 சதவிகித ஸ்மார்ட்போன்கள் நோக்கியா அல்லது பிளாக்பெரி போன்ற நிறுவனங்களின் இயங்குதளங்களையே கொண்டிருந்தது.

பழக்கப்பட்ட வழக்கம் தடம் மாறும் போது தொழில்நுட்ப தலைவர்களும் தோல்வியைத் தழுவும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு உலகளவிலான மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா மற்றும் பிளாக்பெரி நிறுவனங்கள் மாயமாகி வரும் சூழல் தான் இன்று நிலவுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சதவீதம்

அன்று விற்பனையானதில் சுமார் 25 சதவீதத்திற்கும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற இயங்குதளங்கள் இன்று சந்தையில் சுமார் 99 சதவீத பங்கு வகிக்கின்றது.

நிறுத்தம்

இந்த ஆண்டில் நோக்கியாவின் சிம்பயான் மற்றும் பிளாக்பெரி இயங்குதளங்களுக்கு வாட்ஸ்ஆப் சேவையை நிறுத்த இருப்பதாக வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறு

நோக்கியா நிறுவனத்தை $720 கோடிக்கு 2013 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கைப்பற்றியது. நோக்கியாவை வாங்கித் தவறு இழைத்து விட்டதாகக் கருதிய மைக்ரோசாஃப்ட் நோக்கியா நிறுவனத்தினை ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

ஹார்டுவேர்

நோக்கியா நிறுவனம் மூலம் ஹார்டுவேர் பிரிவில் சாதிக்க முடியும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நினைத்தது. எனினும் அந்நிறுவனம் நினைத்தது நடக்கவில்லை.

பிளாக்பெரி

கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு சுமார் $67 கோடி நட்டத்தைச் சந்தித்திருக்கின்றது. இந்திய சந்தையில் வெற்றி காண பிளாக்பெரி நிறுவனம் பீச்சர் போன் சந்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வு தலைவர் விஷால் திரிபாதி தெரிவித்துள்ளார்.

கடினம்

உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை விடச் சிறப்பான சேவையைக் குறைந்த செலவில் பிளாக்பெரி நிறுவனம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் ஆகும்.

மைக்ரோசாஃப்ட்

விண்டோஸ் சார்ந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் வழக்கொழிந்து போகலாம், ஏனெனில் நோக்கியா நிறுவனம் மைக்ரோசாஃப்ட் வசம் இல்லை என மூத்த சந்தை வல்லுநரான கார்திக் தெரிவித்துள்ளார்.

தோல்வி

'ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட பிளாக்பெரி கருவியான ப்ரிவ் சந்தையில் அதிரடியாகப் பார்க்கப்பட்டது எனினும், ப்ரிவ் பயனர்களை ஈர்க்கவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட பிளாக்பெரி நிறுவனம் தாமதம் செய்து விட்டது.

ஃபேஸ்புக்

வாட்ஸ்ஆப் மட்டுமில்லாமல் ஃபேஸ்புக் நிறுவனமும் பிளாக்பெரி 10 இயங்குதளம் கொண்ட கருவிகளுக்கான தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

முடிவு

நோக்கியா மீண்டும் சந்தையில் வருவது குறித்தும் அதன் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்தும் எவ்வித அறிவிப்பும் தற்சமயம் வரை அறிவிக்கப்படவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Is Nokia losing the tech battle Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்