ஐஆர்சிடிசி அதிரடி, இனி டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க வேண்டாம்.!

மக்களுக்குப் பயன்தரும் புதிய அதிரடி சேவை ஒன்றை இந்திய ரயில்வே அறிவிக்க இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

Written By:

இந்திய ரயில்களில் ஜெனரலில் டிக்கெட் பெற நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருக்காது. இந்திய ரயில்வேஸ் மிக விரைவில் பேப்பர்லெஸ், கேஷ்லெஸ் வழிமுறைகளை அறிவிக்க இருக்கின்றது.

இதன் மூலம் ரயில் பயணிகள் அன் ரிசர்வ்டு டிக்கெட்களை நேரடியாகப் பேடிஎம், ஏர்டெல் மனி, ஜியோ மனி, ஃப்ரீசார்ஜ் மற்றும் இதர இ-வேலெட் சேவைகளைக் கொண்டு பெற முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிக்கெட்

ரூபாய் நோட்டு மற்றும் காகிதம் இல்லாத பயணச்சீட்டு வழிமுறையைப் பொருத்த மட்டில் ஐஆர்சிடிசியின் மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இதற்கு அதிகப்படியான பயன்பாடும் முக்கியக் காரணம் ஆகும்.

பயனர்கள்

இந்திய ரயில்வே சேவையினைத் தினசரி அடிப்படையில் சுமார் 2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் 6% பேர் மட்டுமே ஏற்கனவே முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். மற்றபடி சுமார் 94% பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படாமல் சம்மந்தப்பட்ட ரயில் நிலையங்களில் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.

அதிகம்

நேரடியாக விற்பனை செய்யப்பட்டும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால் இந்திய ரயில்வே காகிதம் மற்றும் ரூபாய் நோட்டு இல்லாத பயணச்சீட்டு விநியோக வழிமுறையினைத் துவங்க இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உதவும்

கருப்புப் பணத்திற்கு எதிராக இந்திய பிரதமரின் சமீபத்திய நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் ரூபாய் நோட்டில்லாத வர்த்தகத்தின் பயன்பாட்டு அளவையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதனால் ஐஆர்சிடிசியின் இந்தத் திட்டம் ரூபாய் நோட்டில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் எனக் கூறப்படுகின்றது. .

ஆப்ஸ்

கடந்த ஆண்டு அன்ரிசர்வ்டு டிக்கெட்களைப் பெற ஐஆர்சிடிசி தனி ஆப் ஒன்றை வெளியிட்டது, எனினும் இந்த ஆப் மூலம் சென்னை, மும்பை மற்றும் தில்லி-பல்வல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே டிக்கெட்களைப் பெற முடியும். இதே போல் இந்த ஆண்டு UTSOnMobile எனும் ஆப் வெளியிட்டது, இதைக் கொண்டு டிக்கெட்களை நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இவை இரண்டும் எதிர்பார்த்த அளவு போதிய வரவேற்பினை பெறவில்லை.

காரணம்

இதற்குப் பல்வேறு காரணங்களைக் கூற முடியும், ஆப் மூலம் டிக்கெட் பெறும் போது நிச்சயம் இந்திய ரயில்வேயின் இ-வேலெட் பயன்படுத்த வேண்டும் என்பது ஆகும். 

பயன்பாடு

பேடிஎம், ஏர்டெல் மனி போன்ற தனியார் இ-வேலெட் சேவைகளை மக்கள் திரைப்பட டிக்கெட், கட்டணங்களைச் செலுத்துவது எனப் பயன்பாடு அதிகளவு இருக்கின்றது. எனவே இதே சேவைகளை ரயில்வேயிலும் வழங்கினால் மக்கள் அவற்றைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
IRCTC Tickets Soon Be Booked Via Paytm, Airtel Money
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்