ஐஆர்சிடிசி புதிய சேவை அறிமுகம்..!!

Posted by:

'மாண்புமிகு முதல்வர் ஆணைக்கு இணங்க தீபாவளிக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஊர்களுக்கு சென்றனர்' என்றும், எதிர்கட்சி சார்பில் 'போக்குவரத்து குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும்' உங்களை குழப்ப முயற்சிக்கும் நிலையில் 'ஊருக்கு போனவங்களுக்கு மட்டும் தான் உண்மையான பயண அனுபவம் புரியும்'.

இதனால் தான் இந்திய ரயில்வே எச்சரிக்கையாக செயல்பட்டு புதிய சேவையை 'மக்கள் நலன்' கருதி அறிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பொதுவாக பண்டிகை காலங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது மிகவும் கடினமான விஷயம் என்றே கூறலாம்.

அதுவும் ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து மிகவும் கொடுமையான விஷயம் ஆகும்.

மக்களின் நலன் கருதி இந்திய ரியல்வே பல சேவைகளை அறிவித்திருந்தாலும், ரயில்களில் பயணச்சீட்டு பெறுவது கடினமான ஒன்றாகவே இருக்கின்றது.

பல்வேறு சேவைகளின் வரிசையில் இந்திய ரயில்வே அறிவித்திருக்கும் புதிய திட்டம் தான் கடைசி நேர முன்பதிவு.

அதாவது குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு சரியாக முப்பது நிமிடங்களுக்கு முன் வரை பயணாளிகள் பயணச்சீட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு நிலையங்களின் மூலம் நேரடியாக முன்பதிவு செய்ய முடியும்.

திருத்தப்பட்ட புதிய விதிகளின் படி குறிப்பிட்ட ரயில் புறப்பட சரியாக நான்கு மணி நேரத்திற்கு முன், முதல் முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும் என் இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதோடு இரண்டாவது பட்டியல் ரயில் புறப்படுவதற்கு சரியாக முப்பது நிமிடங்களுக்கு முன் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி பயணாளிகள் ரயில் புறப்படுவதற்கு முப்பது நிமிடங்கள் முன் வரை பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

இறுதி பட்டியல் சீட்டு இருப்பு நிலையை பொருத்து வேறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே அறிவித்திருக்கும் இந்த திட்டம் பயணாளிகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐஆர்சிடிசி மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியை பயன்படுத்தலாம்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
IRCTC lets you book train tickets 30 minutes before departure. Read More in Tamil.
Please Wait while comments are loading...

Social Counting