ஐபோன்8 கருவியின் 'வெயிட்டான' ரகசியம், இதுவாக இருக்கக்கூடும்.!!

ஆப்பிள் பேடன்ட் (காப்புரிமை) தகவலின் கீழ் அடுத்த ஆப்பிள் அக்கருவியான ஐபோன்8-ன் முக்கிய அம்சம் ஒன்று வெளியாகியுள்ளது. உடன் இதற்கு முன்பு வெளியான ஆப்பிள் ஐபோன் 8 லீக்ஸ் பற்றிய ஒரு விரைவு பார்வை.

|

அனுதினமும் ஆயிரமாயிரம் ஸ்மார்ட்போன்களின் லீக்ஸ் தகவல்கள் கிடைக்கிறது. ஆனால், அவைகளெல்லாம் ஐபோன் லீக்ஸ் தகவல்கள் போல் மிக சுவாரசியமான ஒன்றாய் இருப்பதில்லை அதிலும் வெளியான லீக் தகவலின் மூலம் நமக்கு கிடைக்கப்போகும் ஐபோன் அம்சம் அதிலும் மிகப்பெரிய சுவாரசியமாக இருப்பின் அதைத்தான் 'டபுள் டமாக்கா' என்பார்கள். அப்படியான ஒரு டபுள் டமாக்கா தான் இந்த தொகுப்பு.!

ஒவ்வொரு ஐபோன் வெளியீட்டுக்கு முன்பும் ஆப்பிள் 'வெறியர்கள்' அல்லது தீவிர ரசிகர்கள் தேவைக்கும் அதிகமான பணத்தை சேர்த்துக்கொள்வது வழக்கம், ஐபோன் 8 கருவிக்கும் அதேயே தான் நீங்கள் செய்ய வேண்டியதிருக்கும். இப்போது வரையிலாகவே, வெளியாக உள்ள ஐபோன் 8 கருவி பற்றிய குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய பல 'லீக்ஸ்' அறிக்கைள் வெளியாகியுள்ள போதிலும் அதன் விலை பற்றிய தகவல்கள் முற்றிலும் தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் பேடன்ட்

ஆப்பிள் பேடன்ட்

இருப்பினும் ஆப்பிள் பேடன்ட் (காப்புரிமை) தகவலின் கீழ் தற்போது வெளியாகியுள்ள ஐபோன்8 கருவியின் அம்சம் ஒன்று அக்கருவி மீதான நம் எதிர்பார்ப்புகளை இரட்டிப்புபாக்குகிறது என்றே கூற வேண்டும். நீங்கள் கணிப்பு கில்லாடியாக இருப்பின் இந்நேரம் 'அந்த' டபுள் டமாக்கா மற்றும் இரட்டிப்பு எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கும் அம்சத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மிகவும் பிரபலம்

மிகவும் பிரபலம்

ஆம். ஐபோன் 8 கருவியில் இரட்டை சிம் ஆதரவு வழங்கப்படலாம் என்று அதன் பேடன்ட் ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டு எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரட்டை சிம் ஆதரவு கொண்ட போன்கள் மிகவும் பிரபலமானதாக கருதப்படுகின்றன. முக்கியமாக நெட்வர்க் தேர்வுகளை இஷ்டம் போல் நிகழ்த்திக்கொள்ளும் இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பிரபலம்.

2017-ல்

2017-ல்

இதுவொருபக்கமிருக்க மறுபக்கம், ஐபோன் போன்றே மற்ற பல ஹை-எண்ட் கருவிகளில் இந்த அம்சம் இல்லை, மிகவும் குறிப்பிடத்தக்க வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்7கருவியை கூறலாம். ஆனால் 2017-ல் வெளியாகும் அடுத்த ஐபோன் கருவியில் இரண்டு சிம் கார்டுகளுக்கான ஆதரவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காப்புரிமை

காப்புரிமை

ஆப்பிள் நிறுவனமானது இரட்டை சிம் அட்டை அம்சம் ஆதரவு சார்ந்த ஒரு காப்புரிமையை சீன அறிவுசார் சொத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அந்த நிறுவனம் அதே மாதிரியான பயன்பாடு சார்ந்த ஒப்புதலை கடந்த வாரம் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் மூலமாக பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளன.

ஐபோன் 8 லீக்ஸ் - ஒரு விரைவு பார்வை

ஐபோன் 8 லீக்ஸ் - ஒரு விரைவு பார்வை

- கர்வுடு அல்லது எட்ஜ் -டூ-எட்ஜ் டிஸ்ப்ளே
- பெரிய அளவிலான ஸ்க்ரீனை மனதிற்கொண்டு ஹோம் பட்டன் நீக்கப்படுகிறித்து.
- மூன்று வகைகளில் எவ்லியாகும் : 4.7 அங்குல ஐபோன்8. 5.5-அங்குல ஐபோன் 8 பிளஸ் மற்றும் 5.5-அங்குல ஐபோன் 8 பிளஸ் (அமோஎல்இடி டிஸ்ப்ளே)
- ஐபோன் 7 பிளஸ் போன்ற பெரிய வகைகளில் இரட்டை கேமிமரா அமைப்பு.
- ஏ11 செயலி.
- வயர்லெஸ் சார்ஜிங் வசதி
- ஐபோன் 8 நிச்சயமாக ஐபோன் 7 கருவியை போன்றே வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங் வடிவமைப்பை 'ஈ அடிச்சான் காப்பி' அடிக்கும் ஆப்பிள்.!?

Best Mobiles in India

Read more about:
English summary
iPhone 8 may get dual-SIM support, reveals Apple patent filing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X