ஐபோன் 8 'லீக்' தற்சமயம் கசிந்த தகவல்கள்.!

Written By:

ஐபோன் 7 கருவியே இன்னும் வெளியாகவில்லை, இருந்தாலும் இந்தக் கருவி சார்ந்து பல்வேறு தகவல்கள் போட்டோ மற்றும் வீடியோ வடிவில் கசிந்து வருகின்றது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஐபோன் 7 கருவி வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் 2017 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாம்சங்

2017 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 என அழைக்கப்படலாம் என்பதோடு இந்தக் கருவி சாம்சங் நிறுவனம் விநியோகம் செய்யும் OLED திரை கொண்டிருக்கலாம்.

கான்செப்ட்

ஐபோன் 8 குறித்த கான்செப்ட் கிஸ்மோசைனா வெளியிட்டுள்ளது. இந்த கான்செப்ட் டோபியாஸ் பியூட்னர் வடிவமைத்ததாகும். ஐபோன் 8 அம்சங்கள் ஏதும் ஐபோன் 7 கருவியில் வழங்கப்படவிருப்பதை போல் இல்லை.

ஹோம் பட்டன்

ஐபோன் 8 கருவியில் ஹோம் பட்டன் நீக்கப்படும், மாறாக ஹோம் பட்டன் டிஸ்ப்ளேவிலேயே வழங்கப்படும். இது போன்ற வடிவமைப்பு இதுவரை எந்த ஐபோன் கருவியிலும் வழங்கப்படவில்லை.

கிளாஸ்

ஐபோன் 8 கான்செப்ட் இந்தக் கருவியை முழுமையாக கிளாஸ் மூலம் வடிவமைப்பில் காட்டுகின்றது. கருவியின் மேல் மற்றும் கீழ் புற வளைவுகள் முழுமையாக மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றம்

மேலும் ஐபோன் 8 கருவியானது ஐபோன்களின் 10 ஆம் ஆண்டு நிறைவினை சந்திக்கின்றது. இதன் காரணமாக இந்தக் கருவியின் வடிவமைப்பு முற்றிலுமாக மாற்றப்படலாம்.

டூயல்-கேமரா சென்சார்

ஐபோன் 8 கான்செப்ட் டூயல்-கேமரா செட்டப் கொண்டிருக்கலாம். மற்ற டூயல் கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களை விடச் சிறிய சென்சார் கொண்டிருக்கலாம்.

ஐபோன் 7எஸ்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7எஸ் மாடல் கருவிகளை 2017 ஆம் ஆண்டு வெளியிட வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறப்படுகின்றது. மேலும் ஐபோன் 8 கருவியானது 10nm சார்ந்த ஏ11 பிராசஸர் கொண்டிருக்கலாம்.

வயர்லெஸ் சார்ஜிங்

ஐபோன் 7 கருவியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டின் ஐபோன் 8 கருவியில் மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
iPhone 8 MASSIVE LEAK Check the Entire Specs Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்