ஐபோன் 8 இதுவரை யாரும் வழங்கிடாத தொழில்நுட்பம் கொண்டிருக்கும்..

ஆப்பிளின் ஐபோன் 8 இல் புதிய வகைத் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அது என்ன தொழில்நுட்பம், என்பதைப் பார்ப்போமா.??

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 கருவியில் புதிய வகை வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்டு கருவிகளிலும் வழங்கப்படாத புதிய வகை வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இடைவெளி

புதிய வகை வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமானது பயனர்கள் கருவியை 15 அடி தூரத்தில் வைத்திருந்தாலும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜர்கள் கருவியினைச் சார்ஜிங் தட்டின் மேல் வைத்தால் மட்டுமே சார்ஜ் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பெயர்

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் கருவி நிச்சயம் ஐபோன் 8 என்று தான் அழைக்கப்படும். இதற்குக் காரணம் 2017 ஆம் ஆண்டு ஒரிஜினல் ஐபோன் வெளியாகி பத்தாம் ஆண்டு நினைவாக அமைகிறது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தொழில்நுட்பம்

எனர்ஜியஸ் தயாரிக்கும் புதிய வகை வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் ஐபோன் 8 கருவியினை வேறு அறைகளில் இருந்தும் சார்ஜ் செய்யும். கருவியில் பொருத்தப்படும் சிறிய சிப் வயர்லெஸ் சார்ஜரின் பேஸ் ஸ்டேஷனுடன் இணைந்து சுமார் 15 அடி தூரம் வரை கருவியைச் சார்ஜ் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்

டெக் துறையில் முன்னணி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக எனர்ஜியஸ் நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. இது உண்மையாகும் பட்சத்தில் நிச்சயம் புதிய ஐபோன் கருவியில் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படும்.

வடிவமைப்பு

மற்றொரு அறிக்கையில் ஐபோன் 8 கருவியில் அதிகப்படியான வடிவமைுப்பு மாற்றங்கள் இருக்கும் என்றும் ஐபோன் 8 இல் முன் மற்றும் பின்புறங்களில் கிளாஸ் பேனல்கள் கொண்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
iPhone 8 Could Bring True Wireless Charging
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்