ஐபோன்7 தாறு மாறாக இருக்கும், அடித்து கூறுகிறார் டிம் குக்.!!

Written By:

உங்களுக்கு வேண்டும் என்று உங்களுக்கு தெரியாத அம்சங்கள் அடுத்த ஐபோன் கருவியில் வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.

பல்வேறு புதிய அம்சங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐபோன் பயன்படுத்துபவர்களை இந்த அம்சங்கள் பழைய கருவியை கொடுத்து புதிய ஐபோனினை வாங்க தூண்டும் வகையில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

சமீபத்தில் நிறைவடைந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் வியக்கத்தக்க வளர்ச்சியடைந்துள்ளது என்றும் சராசரியாக $50 பில்லியனுக்கும் அதிகமான வருவாய் மற்றும் சுமார் $10 பில்லியன் லாபம் பெற்றிருப்பதாக டிம் குக் தெரிவித்திருந்தார்.

2

மற்ற நிறுவனங்களை விட ஆப்பிள் நிறுவனம் ஈட்டும் லாபத்தை பொருத்த வரை கடந்த ஆண்டு மட்டும் சுமார் $53 பில்லியன் லாபம் பெற்றதாகவும், இரண்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் $24 பில்லியன் லாபம் பெற்றிருக்கலாம் என குக் தெரிவித்துள்ளார்.

3

செப்டம்பர் மாத காலாண்டு வரையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டு மொத்த சந்தையில் லாபம் 94% பெற்றுள்ளது. இது அதற்கும் முந்தைய ஆண்டை விட 85% அதிகம் என கேனக்கார்டு ஜென்யூட்டி ரிசர்ச் தெரிவித்துள்ளது.

4

சீனாவின் மைக்ரோபிளாகிங் தளமான வெய்போ புதிய ஐபோன் கருவிகள் அதிகப்படியான பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

5

மற்ற மாற்றங்களை பொருத்த வரையில் புதிய ஐபோன் 7 கருவியில் மேம்படுத்தப்பட்ட ஹோம் பட்டன் வடிவமைப்பு, டூயல்-லென்ஸ் கேமரா, அதிவேகமான பிராசஸர், மற்றும் வாட்டர்ப்ரூஃப் வசதிகள் வழங்கப்படலாம்.

6

என்ன செய்தாலும் வேலை செய்யும் ஐபோன் எஸ்இ.!!

ரூ.8000 பட்ஜெட்டில் டாப் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!!

7

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
iPhone 7 Will Have Specs 'You Can't Live Without' Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்