ஐபோன் 7 வெளியீடு தேதி மற்றும் அதன் புகைப்படங்கள்

Posted by:

இப்பவே ஆரம்பித்துவிட்டது ஐபோன் 7 குறித்த எதிர்பார்ப்புகள். அதன் விளைவுகள் தான் ஐபோன் 7 வெளியீட்டு தேதி மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இதுவாக தான் இருக்கும் என்று பல செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்து விட்டன.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிய ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் எதிபார்க்கப்படும் சிறப்பம்சங்கள், வெளியீட்டு தேதி மற்றும் சில புகைப்படங்களையும் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வெளியீட்டு தேதி

வழக்கமாக ஐபோன்கள் செப்டம்பர் மாதத்தில் தான் வெளியாகும், இதையே இந்தாண்டும் பின்பற்றினால் புதிய ஐபோன் 7 செப்டம்பர் மாதத்தின் மத்தியில் வெளியாகலாம்.

ஸ்கிரீன்

புதிய ஐபோனில் அனேகமாக 4.7 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3டி டிஸ்ப்ளே

புதிய ஐபோன் 7 3டி டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு இதை அனுபவிக்க தனியாக கண்ணாடிகள் ஏதும் தேவை இல்லை என்றும் கூறப்படுகின்றது.

கேமரா

கேமராவை பொருத்த வரை ஐபோன் 6 மற்றும் 6+ போன்களை விட சிறப்பான கேமரா இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிராசஸர்

ஆப்பிள் நிறுவனத்தின் ஏ9 பிராசஸர் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே பிராசஸர் புதிய ஐபோனிலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜாய்ஸ்டிக்

கேமிங் அனுபவத்தை அதிகப்படுத்த புதிய ஐபோனில் ஜாய்ஸ்டிக் இருக்கும் என்று கூறப்பட்டாலும் இது உறுதியாக கிடைக்குமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

ஃபோர்ஸ் தொழில்நுட்பம்

இது ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தும் டச் சென்சிட்டிவ் தொழில்நுட்பம் தான் இந்த ஃபோர்ஸ் தொழில்நுட்பம்.

வயர்லெஸ் சார்ஜிங்

புதிய ஐபோனில் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் அல்லது இன்டக்டிவ் சார்ஜிங் இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும் சார்ஜிங் செய்ய புதிய தொழில்நுட்பம் ஏதும் அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய சார்ஜர்

புதிய ஐபோனை போன்று புதிய சார்ஜர் மற்றும் லைட்னிங் கனெக்டரும் எதிர்பார்க்க்ப்படுகின்றது.

ஐஓஎஸ் 9

மேலும் ஐஓஎஸ் 9 மென்பொருள் மூலம் புதிய ஐபோன் இயங்கும் என்பதோடு பல புதிய அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
iPhone 7 release date rumours, new features and images. Here you will find iPhone 7 release date rumours, some new features and images of the iphone 7.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்